அண்மையச்செய்திகள்

Thursday, 8 June 2017

மதுரைவீரன் உண்மை வரலாறு நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரைவீரன் உண்மை வரலாறு நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
6 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
""""""""""""""""""""""""""""""

ஆதித்தமிழர் பேரவை முயற்சியில் ஆசிரியர் குழந்தை ராயப்பன் மூலம் எழுத்தப்பட்ட "மதுரைவீரன் உண்மை வரலாறு" நூலை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை வெளியிட்டது. இந்த நூலுக்கு 2015 ஆகத்து 19 ஆம் தேதியன்று அப்போதைய அ.தி.மு.க முதல்வர்  ஜெயலலிதா அரசு தடைவிதித்து உத்தரவிட்டது.

இரண்டாயிரம் பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்ட அந்த சிறிய நூலில் மதுரைவீரனை பற்றிய மறைக்கப்பட்ட பல உண்மைத் தகவல்கள் ஆதாரத்தோடு  அடங்கியுள்ளதால் மதுரைவீரனின் பெயரால் அருந்ததியர் மக்களை  வசப்பப்படுத்தி வைத்திருந்த அ.தி.மு.க விற்கு நெருக்கடி ஏற்பட்டதால், ஆத்திரம் கொண்டு இந்த நூலுக்கு தடை விதித்து தனது அதிகாரத்தைக் காட்டியது.

நூலுக்கான தடையை நீக்கவேண்டும் என்று பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர் குழந்தை ராயப்பனின் பெயரால் வழக்கறிஞர் திருமூர்த்தி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதித்தமிழர் பேரவை, கடந்த 2016 ல் வழக்கு தொடுத்தது,

வழக்கிற்கு வசதியாக அந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தரவேண்டும் என்று நீதிபதி வேண்டுகோள் விடுத்ததன் அடிப்பபடையில் தமிழில் உள்ள அந்த நூலை 2015 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

COURT NO.23:MDJ
40.WP.13992/2017
WMP.15204/2017 
6.6.2017 நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கிற்கான பதிலை 6 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு மாண்புமிகு நீதிபதி துரைச்சாமி அவர்கள் உத்தரவிட்டு தமிழக உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வரலாறு மீட்பு போராளி அய்யா அதியமான் அவர்கள் முயற்சிகள் தோற்றதில்லை!
நூலுக்கான தடை உடைபடும் நாளும் தொலைவிலில்லை!!

வரலாறு இழந்த சமூகம்!
வரலாறு படைக்க முடியாது!!
_____________________
நாகராசன்
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
7.6.2017

No comments:

Post a comment