அண்மையச்செய்திகள்

Thursday, 8 June 2017

சிபிஎம் பொதுசெயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது -- நிறுவனர் அய்யா அதியமான் கண்டனம்

சிபிஎம் பொதுசெயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
"""""""""”"""""""""""""""""""""""""""""""""""""""""""""""

மார்க்சிய பொதுவுடமை கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் சீத்தாரம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பாசிச மதவெறியர்களை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
மார்க்சிய பொதுவுடமை கட்சியின் மத்தியக்குழு அலுவலத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்கள் போர்வையில் ஊடுருவிய பார்ப்பனிய பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென தோழர் யெச்சூரியை தாக்குவதற்கு முற்பட்டுள்ளது, மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
பசுவை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் பலரை தாக்கி கொலைவெறி செயலில் ஈடுபட்ட பாசிச கும்பல்தான் பகுத்தறிவு கருத்தை பரப்புரை செய்த தோழர்கள் கல்புர்கி, கோவிந் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரையும் படுகொலை செய்து தனது பார்ப்பனிய வெறியை காட்டியுள்ளது,
பார்ப்பனியதிற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாமல் தாக்குதல் நடத்துவதும், படுகொலைகளை அரங்கேற்றுவதும் போன்ற மனிதத்தன்மையற்ற வன்செயலில் ஈடுபட்டு வருவது மிகவும் அபாயகரமான செயலாகும்.
இந்திய அளவில் செயலாற்றிவரும் ஒரு தேசிய கட்சியின் முன்னணிப் பொறுப்பாளரை அவரது அலுவலகத்தில் வைத்தே தாக்குவதற்கு முற்பட்டிருக்கும் பாசிச கும்பல் தங்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்வித தாக்குதலையும் செய்ய துணிவார்கள் என்பதையே இது காட்டுகிறது.
இந்திய நாட்டை பார்ப்பன நாடாக மாற்றும் முற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய மோடி அரசின் தொடர் செயலுக்கு இது மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது. பார்பன வெறியை தூண்டி நாட்டின் அமைதிக்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற கொள்கைக்கும் எதிராக செயல்படும் பார்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து மக்களை மதத்தின் பேரால் துண்டாட நினைக்கும் மத்திய மோடி அரசின் செயல்களை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை ஆதித்தமிழர் பேரவை எச்சரிக்கை விடுத்து தனது கண்டனத்தை பதிவு செய்கிறது.
தோழர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முற்பட்ட பாசிச கும்பலை சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய கொள்கையுடைய பகுத்தறிவுவாதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைப்பை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
தலைமையகம், கோவை.
7.6.2017

No comments:

Post a comment