அண்மையச்செய்திகள்

Wednesday, 11 January 2017

கோவையில் ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

ஆதித்தமிழர் பேரவை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி:
******************************
நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மலம் கழிக்கும் போராட்டத்தின் எதிரொலியாக இன்று காலை மாநகராட்சி சார்பில் உடனடியாக தற்காலிக கழிப்பிடம் அமைக்க உப்பிலியப்பன்திட்டு பகுதியில் பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மேலும் நிரந்தர பொதுக்கழிப்பிடம் கட்டித்தர நிலம் தேர்வு செய்யப்பட்டு விரைவாக கட்டித்தரப்படும் என்றும் தண்ணீர்குழாய் இரண்டு நாட்களில் அமைத்து தரப்படும் என்றும் அதிகாரிகள் இன்று ஆய்வின் போது தெரிவித்தனர்.
தற்போது களத்தில் ஆதித்தமிழர் பேரவை களப்போராளி மு.அறிவரசு.
உடன் உப்பிலியப்பன்திட்டு தோழர்கள் மாதேஸ், வெள்ளிங்கிரி, சோமு, மற்றும் சஞ்சய்.No comments:

Post a comment