அண்மையச்செய்திகள்

Monday, 2 January 2017

றுதி ஊர்வலத்தில் தேனிமாவட்ட காவல்துறையினர் அத்துமீறல் ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள் 6 பேர்கைது

றுதி ஊர்வலத்தில் தேனிமாவட்ட காவல்துறையினர் அத்துமீறல் ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள் 6 பேர்கைது
******************************
ஆதித்தமிழர் பேரவை தோழர் ராமமூர்த்தி அவர்களின் தந்தை கண்ணன் அவர்கள் நேற்று உடல்நல குறைவால் காலாமானார் அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து அன்னாரின் இறுதி ஊர்வலம் நடந்தது.இதன் போது போக்குவரத்து இடையூர் செய்கின்றனர் என்று கூறி காவல்துறை இறுதி ஊர்வலத்தை தடுத்தனர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணாமாக இறுதி ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்பட்டு தேனி கம்பம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் தடை ஏற்பட்டது.இதனை காரணம் காட்டி காவல்துறை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தடியடி நடத்தியது பின்பு நள்ளிரவில் 12மணியளவில் பேரவை தோழர்கள் பெ.சுரேசு,விக்னேஸ்,தேனி தொண்டரணி சேர்ப்பி இரமேஸ்,விவேக் ஆகிய தோழர்களின் வீடு புகுந்து அத்துமீறி அடித்து இழுத்து சென்றுள்ளனர் காவல்துறையினர்
தற்போது அனைவரும் பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தோழன்களை வெளியே எடுக்கும் சட்டப்போராட்டம் தொடர்கிறது....

No comments:

Post a comment