அண்மையச்செய்திகள்

Thursday, 25 October 2018

சேலம் ஆத்தூரில் பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ராஜலட்சுமி - அய்யா அதியமான் கண்டனம்


சேலம் ஆத்தூரில் பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ராஜலட்சுமியை கொடூரமாக கொன்றுள்ளான் ஒரு ஆதிக்க சாதியவாதி. கடந்த காலத்தில்
கயர்லாஞ்சி என்கிற கிராமத்தில் நடந்த படுகொலையை போல பட்டியலின மக்கள் மீது மீண்டும் ஒரு பயங்கரமான தாக்குதல், ஊடகங்களின் மௌனம் கண்டனத்துக்குரியது.. பேரவை இதை வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த மாதம் தேனியில் ராகவி என்கிற பதிமூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ஆதிக்க சாதி மாணவனால் கொல்லப்பட்டாள்.

தேனி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் இதுபோன்ற 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து ஆதிக்கசாதி குற்றவாளிகள் தொடர்ந்து தப்பித்து வருகின்றனர் பினாமி. அரசின் காவல்துறை உறுதியான எந்த கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து
வருகிறது. இதை ஆதித்தமிழர் பேரவை கண்டிக்கிறதுNo comments:

Post a comment