அண்மையச்செய்திகள்

Thursday, 25 October 2018

ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் பூமிநாதனின் தாயார் மரணம்

இரங்கல் செய்தி*
*ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தோழர் பூமிநாதன் தாயார் மரணம்*
நாகம்மாள் வயது 94 இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்
*மதிப்பிற்குரிய வீரத்தாய் நாகம்மாள் 70 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைவு போராட்டத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அவரது கணவரும் பூமிநாதனின் தந்தை திரு உடையான் அவர்களுடன் 5 தலித் குடும்பங்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர் ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பம் வீரத்தாய் நாகம்மாள் திரு உடையான் குடும்பத்தினர்*
மேலும் *திரு உடையான் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மதிப்பிற்குரிய தியாகி இமானுவேல் சேகரனாரின் உற்ற நண்பராக இருவரும் ராணுவத்தில் ஒன்றாக பணியாற்றியவர்கள் அதனடிப்படையில் தியாகி இமானுவேல் சேகரனார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் திரு உடையான் அவர்கள் பங்கேற்று உள்ளார்*
வரலாற்றுச் சிறப்புமிக்க *வீரத்தாய் நாகம்மாளின் மறைவிற்கு அய்யா அதியமான் சார்பிலும் தலைமைக்குழு சார்பிலும் செம்மார்ந்த வீரவணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்*
பொதுச்செயலாளர் ஆதித்தமிழர் பேரவை

No comments:

Post a comment