அண்மையச்செய்திகள்

Thursday, 25 October 2018

தோழர் பூமிநாதன் அவர்களுடைய தாயார் நாகம்மாள் அவர்கள் மறைவு - அய்யா அதியமான் இரங்கல்


*ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தோழர் பூமிநாதன் அவர்களுடைய தாயார் நாகம்மாள் அவர்கள் மறைவு அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

பூமிநாதன் அவர்களுடைய தந்தை திரு உடையான் அவர்கள் கோயில் நுழைவு போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்றது குறித்து அறிந்து, ஒரு வரலாற்று சிறப்புமிக்க குடும்பத்தில் நாகம்மாள் அவர்கள் இருந்துள்ளார்கள் என்பது அருந்ததியர்களுக்கு பெருமை வாய்ந்த ஒன்று.

திரு உடையான் அவர்கள் , ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றி உயிர் தியாகம் செய்த திரு இம்மானுவேல் சேகரன் அவர்களுடன் இராணுவத்தில் ஒன்றாக பணியாற்றியதுடன், அவர் செய்த போராட்டங்களில் பங்குபெற்ற வரலாறு மிகவும் போற்றுதலுக்கு உரியது.

இத்தகு சிறப்பு வாய்ந்த குடும்பத்தில் பிறந்த பூமிநாதன் அவர்கள் நமக்கு பேரவையில் செயலாளராக கிடைத்தது அரிதான ஒன்று.

தோழர் பூமிநாதன் அவர்களுக்கு பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.*

-அதியமான்


No comments:

Post a comment