அண்மையச்செய்திகள்

Wednesday, 16 March 2016

ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து, நிறுவனர் அய்யா அதியமான் தலைமையில் 21.3.2016 அன்று கோவை மண்டல காவல்துறை தலைவர் (IG).அலுவலம் முற்றுகை-ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து, நிறுவனர் அய்யா அதியமான் தலைமையில் 21.3.2016 அன்று
கோவை மண்டல காவல்துறை தலைவர் (IG).அலுவலம்
முற்றுகை-ஆர்ப்பாட்டம்
"""""""""""""""""""""""""
உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவர் சங்கர்-கௌசல்யா தம்பதி மீது கோரப் படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டு தலித் இளைஞன் சங்கரை ஆதிக்க சாதி வெறியர்கள் படுகொலை செய்து, கொடூரக் காயங்களுடன் மனதை ஊனப்படுத்தி கெளசல்யா பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வருகிறார்.
*முன்கூட்டியே பாதுகாப்பு கோரியும், பாதுகாப்பு வழங்க தவறி படுகொலை நடக்க காரணமான திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியும்,
*எழுபதுக்கு மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடந்தும், இதுவரை அவைகளை தடுத்து நிறுத்த முன் முயற்சிகள் எடுக்கத் தவறிய தமிழக அ.தி.மு.க அரசைக் கண்டித்தும்,
*ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும், இந்த முற்றுகை நடைபெறுகிறது.
போராட்டத்தில் பெறும் திரளாக தோழர்கள் பங்கேற்க வேண்டும், குறிப்பாக பெண் தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என பேரவையின் நிறுவனர் அழைப்பு விடுத்துள்ளார்.
குறிப்பு. 21.3.2016 அன்று சரியாக காலை 10.30 க்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் முதல் நாள் அதாவது 20.3.2016 அன்று இரவு தலைமை அலுவலம் வந்து சேரவும்.
__________________
தலைமைக்காக
பொதுச்செயலாளர்.


No comments:

Post a Comment