அண்மையச்செய்திகள்

Sunday 20 March 2016

சாதிமறுப்பு காதல்மணம் புரிவோரின் தற்காப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் செய்தியாளர்களிடம் தலைவர் அதியமான் பேட்டி

சாதிமறுப்பு காதல்மணம் புரிவோரின் தற்காப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்
செய்தியாளர்களிடம் தலைவர் அதியமான் பேட்டி.
************
இன்று 20.3.2016
ஜாதி வெறிக் காட்டுமிராண்டிகளால் கோரப்படுகொலைக்கு உள்ளான உடுமலை தம்பி சங்கரின் தந்தை மற்றும் இரண்டு தம்பிகள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களை சந்தித்து பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர்,
வன்கொடுமை கொலைகளை அரங்கேற்றும் சாதிவெறியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்,
*கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், அவரை அரசே தத்தெடுத்து படிக்க வைத்து, அரசு வேலை வழங்க வேண்டும்.
*கெளசல்யாவை இயல்பாக சந்திப்பதற்கு சங்கரின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
*வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி தாழ்த்தப்பட்டோரின் தற்காப்பிற்கு துப்பாக்கி வழங்க வேண்டும்.
* ஆளும் அ.தி.மு.க அரசு முற்றிலும் ஆளும் தகுதியை இழந்துவிட்டது. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த அரசை வரும் சட்டப்பேரவை தேர்தலில் அப்புறப்படுத்துவார்கள்.
__________
தொகுப்பு.
பொதுச்செயலாளர்.









No comments:

Post a Comment