அண்மையச்செய்திகள்

Monday, 14 March 2016

உடுமலைபேட்டை சாதிவெறி கொலையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை உட்பட அமைப்புகள் நடத்திய போராட்டம்:

உடுமலைபேட்டை சாதிவெறி கொலையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை உட்பட அமைப்புகள் நடத்திய போராட்டம்:
உடுமலைப்பேட்டையில் சாதிவெறியர்களால் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் படுகொலையை கண்டித்தும் கொடூரதாக்குதலில் உயிருக்கு போராடும் கெளசல்யாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ,
சாதிமறுப்பு இணையர்களை கொடூரமாக வெட்டிய சாதிவெறியர்களை கைது செய்ய வலியுறுத்தியும் உடுமலையில் இன்று மாலை ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாநில துணைப் பொதுச்செயாலாளர் மா.ஈழவேந்தன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னனி உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.

No comments:

Post a Comment