அண்மையச்செய்திகள்

Sunday, 20 March 2016

"அய்யா"ஆசிரியர் கி.வீரமணி அதியமானுக்கு புகழாரம்.!!

"அய்யா"ஆசிரியர் கி.வீரமணி அதியமானுக்கு புகழாரம்.
""""""""''''''''''''
திரவிடர் கழகம்
சார்பில் இரண்டு நாள் மாநாடு திருச்சியில் தொடங்கியது.
மார்ச்.19, 20 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி சிறுகனூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநாடு தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு "சமூகநீதி" என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
முதல் நாள்.
"""""""""""""""""
19.3.2016 தொடங்கிய முதல் நாள் மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தந்தை பெரியார் அவர்களின் திரு உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
முன்னதாக பேசிய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அய்யா அதியமான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, அடித்தட்டு மக்களை அம்பேத்கர், பெரியார் வழியில் அணிதிரட்டும் ஆதித்தமிழர் பேரவையை திராவிடர் கழகம் ஒத்த கருத்து உள்ள இயக்கமாக மட்டும் பார்க்கவில்லை, நாங்கள் இருவருமே திராவிடர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று பெருமிதம் கொண்டார். மேலும் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்கும் முழு தகுதி அடித்தட்டு மக்களை அணிதிரட்டும் சகோதரர் அதியமானுக்கு உண்டு என்று புகழாரம் சூட்டினார்.

(சமூக நீதி மாநாட்டில் கலந்து கொண்ட சாவித்திரி பாய் பூலே வின் பேத்திக்கு ஆதித்தமிழர் பேரவை வெளியிட்ட சாவித்திரி பாய் பூலே வின் வரலாற்று புத்தகத்தை நமது அரசியல் முகவரி அய்யா அவர்கள் வழங்கினர்)

மாநாட்டில் அய்யா அதியமான் அவர்கள் உரையாற்றிய காணொளியை காண இங்கு சொடுக்கவும்
No comments:

Post a Comment