அண்மையச்செய்திகள்

Sunday, 13 March 2016

உலக மகளிர் நாளில் ஆதித்தமிழர் பேரவை மதுரையில் நடத்திய "இழிவொழிப்பு மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட எழுத்தாளர் தோழர் மதிமாறன் அவர்கள் மாநாடு குறித்து தனது முகநூலில் பதிந்த பதிவு

உலக மகளிர் நாளில் ஆதித்தமிழர் பேரவை மதுரையில் நடத்திய "இழிவொழிப்பு மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட எழுத்தாளர் தோழர் மதிமாறன் அவர்கள் மாநாடு குறித்து தனது முகநூலில் பதிந்த பதிவு

---------
Mathimaran Mathi
இவ்வளவு பெண்கள் மத்தியில் நான் பேசியது இதுதான் முதல் முறை. நான்கு நாட்களுக்கு முன் முடிவு செய்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கே இவ்வளவு பேர் வந்திருந்தார்கள்.
மாநாட்டில் என்னை விடச் சிறப்பாக, ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் அவர்களும் பொதுச்செயலாளர் நாகராசனும் பேசினார்கள்.
மலம் அள்ளும் அவலத்திலிருந்து பெண்களை மீட்டெக்க 8 ஆம் தேதி மதுரையில் நடத்தப்பட்ட மாநாடு - . மிகச் சிறப்பாக நடத்தப்பட்ட மகளிர் தினம் இதுதான்.
இந்தப் பெண்களை விடவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிற நபர்கள் உலகிலேயே யாரும் இருக்க முடியாது. ஜாதி வர்க்க நிலையில் இவர்களுக்குக் கீழ் யாருமே இல்லை.
இவர்களை ஒடுக்குமுறை செய்கிறவர்களில் ஆண்-பெண் பேதமில்லை. எல்லோருமே குற்றவாளிகள் தான்.

No comments:

Post a Comment