அண்மையச்செய்திகள்

Wednesday 9 March 2016

உலக மகளிர் நாளில் ஆதித்தமிழர் பேரவை மதுரையில் நடத்திய "இழிவொழிப்பு மகளிர் மாநாடு" - செய்தி, தீர்மானங்கள், படங்கள்:

உலக மகளிர் நாளில் ஆதித்தமிழர் பேரவை மதுரையில் நடத்திய "இழிவொழிப்பு மகளிர் மாநாடு" - செய்தி, தீர்மானங்கள், படங்கள்:


இழிவொழிப்பு மகளிர் மாநாடு காணொளியை காண இங்கு சொடுக்கவும்

ஆதித்தமிழர் பேரவை சார்பில் மார்ச் 8 உலக மகளிர் நாளன்று மாலை 4 மணிக்கு மதுரை நீதியரசர் கிருஸ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் "பெண்களை மலமள்ளும்" அவலத்தில் இருந்து மீட்டிட "இழிவொழிப்பு மகளிர் மாநாடு" நடைபெற்றது. மாநாட்டிற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவநர் "அய்யா" இரா.அதியமான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவை மகளிர் அணி மாவட்ட செயலாளர் இரா.கெளரி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஆ.நாகராசன்,
தென்மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரஜினி, திராவிடர் விடுதலைக்கழக மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், எழுத்தாளர், வே.மதிமாறன், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மெய்யப்பன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழக பொறுப்பாளர், திவ்யா, உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.மாநாட்டில் மலம் அள்ளும் அவலம் குறித்து துப்புரவுத் தொழிலாளி ப.முத்துமாரி அவர்கள் வாக்குமூலம் அளித்தார். முடிவில் பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கபீர்நகர் கார்த்திக் நன்றி கூறினார். மாநாட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர், ஆதவன், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் செய்தனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
"""""'"'''''''''''''''''''''''''
தீர்மானம்.1
பெண்கள் மலமள்ளும் முறை ஒழித்துக்கட்ட வேண்டும்.
""''''''''"""'""""""'
இந்தியாவில் உள்ள தூய்மைத் தொழிலாளர்களில் கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 80 விழுக்காடுக்கு மேலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இத்தகைய அவலத்தில் இருந்து முற்றிலும் பெண்களை விடுவிப்பதோடு,
மனித மலத்தை மனிதன் அகற்றும் இம் மக்களையும் முழுமையாக விடுவித்து இவர்களுக்கும், இவர்களது குடும்பத்ததாருக்கும் மாற்றுத் தொழில் வழங்கி மறுவாழ்வை ஏற்படுத்திட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம்.2
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்த வேண்டும்.
""""""""""""'"""""
உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் 1993 முதல் நச்சுவாயு தாக்கி இறந்தவர்களை கணக்கெடுத்து அனைவருக்கும் பத்து லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், அப்படி நச்சுவாயு தாக்கி இறந்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்பதால் அந்த ஆண்களை நம்பி வாழ்ந்த பெண்கள், குழந்தைகளின் நிலை முற்றிலும் பாதிக்கபடுவதால் அரசுகள் அக்கரையுடன் செயல்பட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் வழங்கியுள்ள அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப் படுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுருத்துகிறது.
தீர்மானம்.3
BIOTOILET முறையை இரயில்வே துறையில் அமல்படுத்த வேண்டும்.
""""""""""""""""""
இந்திய இரயில்வே துறையில்தான் மிக அதிகமாக கையால் மலமள்ளும் முறை இருந்துவருகிறது, இதில் பெரும்பான்மையாக பெண்களே ஈடுபடுத்தப் படுகின்றனர், இந்நிலையை மாற்றுவதற்கு மத்திய அரசு 2020 க்குள் "BIOTOILET" என்ற தொழில்நுட்பத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது, இத்திட்டத்தை இம் மாநாடு வரவேற்கிறது,
அதே நிலையில் இந்த திட்டம் வெறும் அறிவிப்போடு நின்று போகாமல் உடனடியாக செயல்படுத்துவதற்கான முயற்சியில் இரயில்வே துறை துரித நடவடிக்கையில் ஈடுபட்டு கையால் மலமள்ளும் முறையை முற்றிலும் ஒழித்திட வேண்டும் என மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம்.4
கையால் மலமள்ளும் முறையை தடை செய்யும் முறையை தமிழகத்தில் முதலில் நடைமுறைப் படுத்தவேண்டும்.
""""""""""""""''''''''''''''
இந்தியாவில் அனைத்து சமூகநீதித் தளங்களிலும் தமிழகம்தான் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது, அதுபோலவே கையால் மலமள்ளும் இழிவை ஒழித்த பெருமையும் தமிழ்நாட்டிற்கே முதலில் வந்து சேர வேண்டும் என இம்மாநாடு எதிர்பார்க்கின்றது, எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் வேறுபாடுளை மறந்து இதற்காக ஒருமித்த குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்று அனைத்து ஜனநாயக சக்திகளையும் இம் மாநாட்டின் வாயிலாக ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்.5
பெண்களுக்கான இடஒதுக்கீடு
""''""'"""""''''''''''''''''''''''
பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை நாடாளுமன்ற மக்களவை, மற்றும் மாநிலங்களவையிலும், அனைத்து மாநில சட்டப்பேரவையிலும் நடைமுறைப் படுத்தும் வகையில் சட்டம் இயற்றவேண்டும், அதில் சமூகநீதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும் என இம் மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம்.6
மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
"""""""""""''"""'""
வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து குடிக்கலாச்சாரத்தைப் பரப்பி, சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரையும் குடிநோயாளிகளாக்கி, குடும்ப வாழ்வைப் பாழாக்கி, உழைக்கும் மக்களைச் சீரழித்துவரும் தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை இம்மாநாடு மிக வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் நலன் கருதி தி.மு.க. 2016–ல் ஆட்சிக்கு வரும்போது மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்துவோம் என்று அறிவிப்பு செய்துள்ளது, அதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும், இம் மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
மேலும் மாநிலத்திற்கு மாநிலம் ஒரு நிலைப்பாடு என்றில்லாமல் தேசிய அளவில் ஒரே நிலைப்பாடாக அமையும் வகையில் மதுவிலக்குக் கொள்கையை இந்திய அரசு தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டுமெனவும் அதற்கெனச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமெனவும் இம்மாநாடு இந்திய அரசை கேட்டுக்கொள்கிறது.
ஊடக செய்தி:
http://www.pathivu.com/?p=64282
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=162133
http://www.dinakaran.com/District_Detail.asp…
http://keetru.com/…/2014-03-08-12…/30370-2016-03-07-03-39-42
http://dvkperiyar.com/?p=13580
http://www.oodaru.com/?p=9734












No comments:

Post a Comment