அண்மையச்செய்திகள்

Tuesday, 29 March 2016

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளில் அந்த மாபெரும் புரட்சிப் பேரணியில் பங்கெடுத்து மலமள்ளும் இழிவினை ஒழிக்க உறுதி ஏற்போம் தோழர்களே!!! -----அய்யா அதியமான்

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளில் அந்த மாபெரும் புரட்சிப் பேரணியில் பங்கெடுத்து மலமள்ளும் இழிவினை ஒழிக்க உறுதி ஏற்போம் தோழர்களே!!! -----அய்யா அதியமான்

"சாதி அமைப்பானது உலகம் முழுவதிலும் 250 மில்லியன் மக்களை பல்வேறு நாடுகளில் பாதித்துள்ளது" என்று 2016ஆம் ஆண்டின் ஐநாவின் பிரத்யேக குழு ஒன்று ஐநாவின் மனித உரிமை அங்கத்திற்கு ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளது. அந்தஅறிக்கையின் விவரங்கள்:

http://www.un.org/apps/news/story.asp…

இந்தியாவில் நிலவும் மலமள்ளும் அவலமும் சாதி அமைப்பைச் சார்ததே. எனவே, மார்ச்19ஆம் தேதியன்று சபாய் கரம்சாரி அந்தோலன் (ska) அமைப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் நாடாளுமன்ற எம்பிக்களை அடங்கிய குழுவினர் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து "மலமள்ளும் இழிவினை ஒழிக்க" மனு செய்துள்ளனர். ஏற்கனவே SKA அமைப்பினர் தமிழ்நாட்டில் பீம்யாத்ரா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது பேரவை அனைத்து ஊர்களிலும் அக்குழுவினரை வரவேற்று அந்த யாத்திரையில் பங்கெடுத்து சிறப்பித்தது. பீம் யாத்ரா புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளன்று டெல்லியில் மாபெரும்பேரணியுடன் முடிவடைகின்றது. எனவே, புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளில் அந்த மாபெரும் புரட்சிப் பேரணியில் பங்கெடுத்து மலமள்ளும் இழிவினை ஒழிக்க உறுதி ஏற்போம் தோழர்களே!!!
No comments:

Post a Comment