அண்மையச்செய்திகள்

Sunday, 13 March 2016

“தேமுதிக வெற்றி வாய்பை நழுவவிட்டுவிட்டது” - ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்கள்:

“தேமுதிக வெற்றி வாய்பை நழுவவிட்டுவிட்டது” - ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்கள்:


13 மார்ச் 2016 அன்று நாமக்கல்லில் நடந்த ஆதித்தமிழர் பேரவை முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்கள் கூறியதாவது:
கடந்தகால கலைஞர் ஆட்சியில் அவரால் பயன்பெறாத ஒரு சமுதாயம் கூட கிடையாது. அனைத்து சமுதாயத்தினருக்கும் கலைஞர் ஆற்றியிருக்கிற பணி ஈடு இணையில்லாதது. எனவே நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறப்போவது உறுதி!!
குறிப்பாக அருந்ததியர் சமூகத்தினரைப் பொறுத்தவரை இதுவரை யாரும் நினைத்திராத, பேசியிராத வகையில் ஒட்டுமொத்த அருந்ததியர் பிரச்சனைகளை கையிலெடுத்து அவர் வழங்கியதுதான் அருந்ததியினருக்கான மூன்று சத உள்ளிட ஒதுக்கீடு, ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம், தூய்மை தொழிலாளர் நல வாரியம் போன்றவை. எனவே ஆதித்தமிழர் பேரவை திராவிட முன்னேற்ற கழகத்தை முழுமையாக ஆதரித்து வருங்கின்ற சட்டமன்ற தேர்தலில் முன்னணியில் நின்று தேர்தல் பிரச்சார களப்பணியாற்றும்!!
தலைவர் கலைஞர் அவர்களின் கூட்டணி அழைப்பை தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்கள் பயன்படுத்த தவறிவிட்டார்!! தேமுதிக முக்கிய செயலாளர்கள் அத்துணை பேரும் திமுக கூட்டணியை விரும்புபவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே திமுகவுடன் இணைந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தேமுதிக நழுவவிட்டுவிட்டது என்று கருதுகிறோம்.

தினத்தந்தி செய்தி தொலைகாட்சியில் வெளியான செய்திகளை காண இங்கு சொடுக்கவும்


No comments:

Post a Comment