அண்மையச்செய்திகள்

Wednesday 23 November 2016

பல்கலைகழகங்களில் நடைபெற்றுவரும் முறைகேடுகளுக்கு எதிராக ஆதித்தமிழர் பேரவையின #ஜனநாயக போராட்டங்கள் தொடரும். ---- ஆதித்தமிழன்- ஊடகமையம் (ஆதபே)


அருந்ததிய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சிறு உரிமைகளை பெறுவதற்கு கூட வருட கணக்கில் போராட வேண்டிய அவலம்.

#அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டின் மூலம் பாரதியார் பல்கலைகழகத்தில்11 இடங்களும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 2 இடங்களும் பேராசிரியர் துணை பேராசிரியர் இடங்கள் அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சிறு மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் அருந்ததியர் மக்களுக்கு மூன்று #விழுக்காடு உள் இடஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் உள்ள பலதுறைகளில் இச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனையானது,

குறிப்பாக பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், இணை பேராசிரியர், மற்றும் பேராசிரியர் போன்ற பணிகளில் அருந்ததியர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டும், அந்த இடங்களை வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தி திட்டமிட்டு மறுக்கப்பட்டே வருகிறது, மேலும் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள 22 மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிக்கு அருந்ததியர் ஒருவர் கூட நியமிக்கப் படவில்லை.

இதில் குறிப்பாக 30 ஆண்டுகளாக மேற்கு மண்டலத்தில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகம் உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதில் முதன்மையாய் விளங்கி வந்தது, மேற்கு மண்டலத்தில் அருந்ததியர்களும், கவுண்டர்களும் அதிகளவில் உள்ள நிலையில், தகுதி உள்ள ஒரு பட்டியல் இனத்தவரோ அல்லது ஒரு அருந்ததியரோ இதுவரை பாரதியார் பல்கலை கழகத்தில் துணை வேந்தராக அமர்த்தப்படவில்லை.

இப்படி முறைகேடாக நடந்து கொள்ளும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை எதிர்த்து கடந்த 22.3.2012 அன்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் உடனிருக்க கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழங்களிலும் குறிப்பாக பாரதியார் பல்கலைகழகத்தில் அருந்ததியர் மக்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தாமல் திட்டமிட்டு அலட்சியப்படுத்தி வருவதை அம்பலப்படுத்தி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இதனை கண்டித்து 2.4.2012 அன்று #பாரதியார் #பல்கலைக்கழகம் முன்பு ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பும் செய்யப்பட்டது.

அறிவித்தபடி #ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு 2.4.2012 அன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நிறுவனர் அதியமான் அவர்கள் பல்கலைக்கழக மானிய குழு (UGC) தனது சுற்றறிக்கையில் 31.03.2102 க்குள் SC / ST காலியிடங்களை சிறப்பு நியமன தேர்வின் (Special recruitment drive) மூலம் நிறைவு செய்ய ஆணையிட்டும், ஆதிக்க சாதி மனோநிலை கொண்ட இந்த பல்கலைக்கழக நிர்வாகம் இந்த நிமிடம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடு,

#UGC தற்காலிக ஆசிரியர் பணி நியமனங்கள் செய்ய 35 பேர் தேர்ந்தெடுக்க விளம்பரம் கொடுத்ததில் "(SC(A) க்கு 5 பேர்" , இதில் (SC(A) இல் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், மீதம் நான்கு பேருக்கு நேர்காணலே நடத்தப்படவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் தேர்தெடுக்கப்பட்ட 26 பேரில் 17 பேர்களும் ஒரே சமூகத்தை (கவுண்டர்) சார்ந்தவர்கள்.

இது மட்டுமல்லாமல் தற்காலிக ஆசிரியர் பணியாளர்களின் பணி நியமனம் 31.03.2012 இல் முடிவடையம் நிலையில் பல்கலைகழக மானிய குழுவின் நெறிமுறைகளை மீறியும் அரசின் இட ஒதுக்கீடு அரசாணைகளை மீறியும் மீண்டும் பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதன் மூலம் SC அருந்ததியர்களுக்கான பணிவாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது இதை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி குழு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்,

தொடர்ந்து, பல்கலைக்கழக மானிய குழு UGC தனது 11.வது ஐந்தாண்டு திட்டத்தில் பட்டியிலின மாணவர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி சுமார் ஒன்றரை கோடி ரூபாயை Remedial Coaching Classes மூலம் மாணவர்களின் குறை களைவு பயிற்சி வகுப்புகள் நடத்த ஒதுக்கப்பட்ட நிதியை ஐந்தாண்டுகாலமாக செலவிடாமல் நிதியாண்டு இறுதியில் அவசர அவசரமாக செலவிட ஆணையிட்டுள்ளது எனவும், இதனால் பட்டியலின மாணவ மாணவியர்களுக்கு கிடைக்கவேண்டிய பயனை வஞ்சனையாக திட்டமிட்டு இந்த நிர்வாகம் சூழ்ச்சியோடு தடுத்து நிறுத்தியள்ளது மட்டுமல்லாமல்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவிலும் (சிண்டிகேட்) மற்றும் தகுதி நிலை கண்டறியும் குழுவிலும் (Scrutinizing Comitee ) பட்டியல் இனத்தவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இந்த நிர்வாகம் வழங்கவில்லை எனவும், இது போல் இந்நிர்வாகத்தின் பல்வேறு முறைகேடுகளை பட்டியலிட்டார்.

இது தொடர்பாக #விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்து பட்டியிலின மாணவர்களின் உரிமையை பாதுக்காக்க நடவடிக்கை வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டு கொண்டார்.

இதே போல் 23.6.2014 அன்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டில் நிரப்பவேண்டிய பணியிடங்களை நிரப்பாமல் முறைகேடு செய்யும் காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அய்யா #அதியமான் அவர்கள் தலைமையில் #காமராசர் பல்கலைக் கழகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கை மனு நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

இந்த நிலை பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல தொடக்க பள்ளி ஆசிரியர் தேர்விலும் கூட இந்நிலையே இருந்து கொண்டிருக்கிறது, அருந்ததியர் மக்களின் உள் இட ஒதுக்கீடு 3 விழுக்காடு வழங்க பட்ட பின். அருந்ததிய மக்கள் ஓரளவு பயன்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஒதுக்கீட்டைக் கூட அருந்ததிய மக்கள் பெற்று விட கூடாது என சில அரசு நிர்வாகங்களினாலும், அருந்ததிய மக்களுக்கு கிடத்திருக்கும் இந்த குறைந்த அளவு உள் இட ஒதுக்கீடும் கூடாது என சிலர் நயவஞ்சகமாக செயல்பட்டு வரும் நிலையில்,

ஆதித்தமிழர் பேரவை மற்றும் ஜனநாயக அபைப்புகளின் தொடர் போராட்டங்களினாலும் கோரிக்கை மனுக்களாலும் பாரதியார் பல்கலைக்கழகம், மற்றும் சில பல்கலைகழகங்களில் அருந்ததியர் மக்களுக்கு பேராசிரியர் துணைப்பேராசிரியர் பதவிகள் நிரப்பப்பட்டு வருகிறது என்ற செய்திகள் கடுகளவு மகிழ்ச்சி தருகின்றன.

அருந்ததிய மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சிறு உரிமையை பெறுவதற்கு கூட வருட கணக்கில் போராட வேண்டிய அவல நிலையில் இன்றும் அருந்ததியர் மக்கள் இருப்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, கல்வி வேலை வாய்ப்புகளில் அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும், இந்த் ஒதுக்கீட்டை அரசியலிலும் ஒதுக்கீடு செய்து அருந்ததிய மக்களுக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும் எனவும், இதனை கண்காணிக்க அரசு கண்காணிப்பு குழு அமைத்து

அருந்தத்தியர் மக்களின் இட ஒதுக்கீட்டின் அளவினை 6.விழுக்காடாக உயர்த்தி வழங்கிட, முறையாக நடைமுறை படுத்திட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை மீண்டும் தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.

என்று சாதி ஒழிப்பு பணியில் அய்யா அதியமான் வழியில்
ஆதித்தமிழன்
#ஆதித்தமிழர் #பேரவை #ஊடக #மையம்.










No comments:

Post a Comment