அண்மையச்செய்திகள்

Thursday, 3 November 2016

தமிழகத்தில் தொடரும் சாதிவெறி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து.. இன்று 3.10.2016 வியாழனன்று நடைபெற்ற தென்மண்டல IG அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் தொடரும் சாதிவெறி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து..
இன்று 3.10.2016 வியாழனன்று நடைபெற்ற தென்மண்டல IG அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் பேரவையின் நிறுவனர் அய்யா அதியமான் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டார்.
தோழர்கள் கொளத்தூர்.மணி, அரங்க.குணசேகரன், மீதா.பாண்டியன், நாகை.திருவள்ளுவன், விடுதலைவீரன், சரீப், பிரிசில்லாபண்டியன், ஆற்றலரசு, அப்துல்சமது மற்றும் எஸ்டிபிஐ, பி.எஸ்.பி, உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்களும் தலைவர்களும் தொண்டர்களும் 500 க்கும் மேற்பட்டோர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆணவக்கொலைகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஐ.ஜி அலுவலகம் முற்றுகையிட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டு கே.புதூரில் உள்ள ஓர் தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். உடன் பொதுச்செயலாளர் நாகராசன் உட்பட பெறும் திரளாக பேரவை தோழர்கள் பங்கேற்றனர்.
______________
செய்திச் சுருக்கம்.
பொதுச்செயலாளர்.
3.10.2016 மதுரை.

No comments:

Post a comment