அண்மையச்செய்திகள்

Sunday 27 November 2016

ஆதித்தமிழர் பேரவை மகளிரணிச்செயலாளர் இராணி நினைவுநாளில் 26.11.2016 தாராபுரத்தில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கணடன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவை மகளிரணிச்செயலாளர் இராணி நினைவுநாள் 26.11.2016 அன்று தாராபுரத்தில் சாதிஆதிக்க ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கணடன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கடந்த 26.11.2013 அன்று அருந்ததியர் மக்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரி
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அம்பேத்கர் சிலை அருகில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்த திருச்சி இராணி அவர்களின் நினைவு நாளில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தாபுரத்தில் சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நிறுவனர் அதியமான் தலைமை தாங்கினார், கூட்டத்தில் பேரவை தோழர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு திருச்சி இராணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
நிறுவனர் அதியமான் திருச்சி இராணி அவர்களை பற்றி குறிப்பிட்டு பேசும் போது, ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை முழங்க தொடர் போராட்டங்களால் கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக அரசால் அருந்ததிய மக்களுக்கு 3 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது, இதனால் இந்த மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறிய அளவு கூட பயன்பெறாமல் இருந்த காலங்கள் மாறி குறிப்பிட்ட அளவு பொறியாளர்களும், மருத்துவர்களும் உருவாக வாய்ப்புகள் அமைந்தது. இதற்கு காரணமான திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் மக்களும் மீண்டும் தங்களின் நெஞ்சம் நிறந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அருந்ததியர்களின் நீண்ட கால கோரிக்கையான 6 விழுக்காடு இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இதை இப்போதைய அரசு அலட்சிய படுத்தாமல் அருந்ததிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய விகிதாச்சாரம் மற்றும் இழிநிலை ஒழிப்புக்கான வழி முறையாக  3 விழுக்காடு ஒட ஒதுக்கீட்டை  6 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 26.11.2013 ஆம் ஆண்டு ஆதித்தமிழர் பேரவை மாநில மகளிரணிச் செயலாளர் வீரமங்கை இராணி அவர்கள் திருச்சி அம்பேத்கார் சிலை அருகில் தீக்குளித்து இறந்தார். ஆதித்தமிழர் பேரவை இதுபோன்ற தீக்குளிப்பிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் திருச்சி இராணி மற்றும் ஒட்டுமொத்த அருந்ததியர்களின் லட்சிய கோரிக்கையான 6 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அளித்து இம்மக்களின் வாழ்வை மேம்படுத்த முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் இராணி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து. 26.11.2016 அன்று பிடல் காஸ்ட்ரோ இறப்பின் செய்தியை அறிந்த நிறுவனர், அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களையும், மக்கள் மீது அவருக்கு இருந்த மாறாத பற்றையும், அவர் எடுத்துக்கொண்ட போராட்ட யுக்திகளையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார். பின்னர் பிடல்காஸ்ட்ரோ மறைவிற்கு நூற்றுக்கணக்கான நீலச்சட்டை தொண்டர்கள் எழுந்து நின்று நிறுவனர் முன்னிலையில் அமைதிகாத்து இரண்டு நிமிடம் வீரவணக்கம் செலுத்தினர்.

மேலும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்.
***************
*தமிழகத்தில் நாளும் நாளும் அதிகரித்து வரும் சாதி ஆதிக்க ஆணவப்படுகொலை என்பது,
2013 பெரம்பலூர்.பார்த்திபன் 2013 தருமபுரி.இளவரசன் 2015 சேலம்.கோகுல்ராஜ்
2016 உடுமலைப்பேட்டை.சங்கர் 2016 பழனி.சிவகுருநாதன் என இதுவரை 100 க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளது, இந்த வன்கொடுமை ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இக்கூட்டத்தின் மூலம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

*கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் அருந்ததியர் மக்களுக்கான மூன்று விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு செய்து நடைமுறைப் படுத்திட வேண்டும் என தமிழக அரசை இந்தப் பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.






No comments:

Post a Comment