அண்மையச்செய்திகள்

Wednesday, 16 November 2016

ஆதித்தமிழர் பேரவை தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் 13.11.16 அன்று நடைபெற்றது.இதில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்
1 - எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் .
2 - தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்த வேண்டும் .
3 - தமிழ்நாட்டில் கையால் மலம் அள்ளும் சட்டம் அமலில் இருந்தும் , தேனி - அல்லிநகரம் தூய்மை பணியாளர்கள் உபகரணங்கள் இன்றி செய்கின்றனர் ,உபகரணங்கள் இன்றி பனி செய்ய வலியுறுத்தும் தேனி - அல்லிநகரம் நகராட்சி நிர்வாகிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 - தேனி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் அதிகாமாக தலித் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவே கந்து வட்டி கொடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என மாவட்ட காவல்துறையை ஆதித்தமிழர் பேரவை கேட்டு கொள்கிறது.
5 - அதிமுக பிரமுகர் பால்பாண்டி 12 ஆவது வார்டில் தனக்கு சொந்தமான கட்டண கழிப்பறையில் 24 மணி நேரமும் போலி மதுபானங்களை தயாரித்து வீரப்பனை செய்து வருகின்றார் பலமுறை மனு கொடுத்ததும் நடவடிக்கை இல்லை .அந்த பகுதியில் மது அருந்தி விட்டு பெண்களை கேலி செய்வதும் ஆபாசமாகவும் பேசி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு சாதி கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் .
6 - தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் அய்யம்பட்டியிலும் ,ஆண்டிபட்டி ஒன்றிய ஜி.உசிலம்பட்டியிலும் இரட்டை டம்ளர் முறை ,செருப்பு போடா தடை தீண்டாமை வன்கொடுமைகள் அதிகமாக இருப்பதால் அதனை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இச்செயற்குழு கூட்டத்தில் தோழர் இளந்தமிழன் ( மாவட்ட செயலாளர் ) தலைமை தாங்கினார், தீப்பொறி அரசு (மாவட்ட தலைவர் ) ச.வல்லரசு (மாவட்ட துணை செயலாளர்) ,மு,நீசிவா (மாவட்ட செய்தி தொடர்பாளர்) , வ.காட்டு ராஜா ( போடி ஒன்றிய செயலாளர் ) , வே .மல்லைச்சாமி (ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்),தமிழவன் (மாவட்ட மாணவரணிச்செயலாளர்) தென்னரசு ( தேனீ நகர இளைஞரணிச்செயலாளர்) முன்னிலை வகித்தனர்,இறுதியில் ஆ. நாகராசன் ( தேனீ நகரச்செயலாளர்) நன்றிஉரை ஆற்றினார்.


No comments:

Post a comment