அண்மையச்செய்திகள்

Monday, 8 May 2017

நெல்லை மாநகரில் மே 13!! ல் மக்கள் திரள் ஆர்பாட்டம்

நெல்லை மாநகரில் மே 13 ல் மக்கள் திரள் ஆர்பாட்டம்
* விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் #தொட்டியபட்டியில்_அருந்ததியர் மக்கள் மீது திட்டமிட்டு சாதிய தாக்குதல்களை கண்டித்தும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யப்படாததை கண்டித்தும், சேதப்படுத்தப்பட்ட வீடுகளை சீரமைத்து தராமல் அலட்சிய படுத்தி வரும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் ....
* அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ஆறு விழுக்காடாக உயர்த்த கோரி உயிர் தியாகம் செய்த போராளிகள் #பழநீலவேந்தன்_திருச்சி_இராணி_திருப்பூர்_மகேசுவரன் , ஆகியோர்களை சமூகநீதி போராளிகளாக அறிவிக்க வலியுறுத்தியும் ..
* மாதந்தோறும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவதை போல் #துப்பரவு_பணியாளர்களுக்கும்_குறை_தீர்க்கும் கூட்டம் நடத்த வலியுறுத்தியும் ...
* தாமிரபரணி நதி நீரை பெப்சி , கோகோ கோலா போன்ற வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதை #நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தியும்
#மக்கள்_திரள்_ஆர்ப்பாட்டம்
கண்டன நிறைவுரை
#நீலச்சட்டை_போராளிகளின்_தளபதி
ஆ.நாகராசன் - பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
நெல்லை - கிழக்கு மாவட்டம்No comments:

Post a comment