அண்மையச்செய்திகள்

Wednesday, 31 May 2017

சென்னை ஐ.ஐ.டி. மாணவர் மீதான கொலைவெறித் தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.-- நிறுவனர் அய்யா அதியமான் கண்டனம்

சென்னை ஐ.ஐ.டி. மாணவர் மீதான கொலைவெறித் தாக்குதலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
""""""""""""""""""""
நிறுவனர் அய்யா அதியமான் கண்டனம்
சென்னை ஐ.ஐ.டியில் மாட்டிறைச்சி விழாவிற்கு ஏற்பாடு செய்த
PhD, ஆய்வு மாணவர் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் செயல் பாட்டாளர் சூரஜ் பார்ப்பனிய ஏபிவிபி ஆதரவு மாணவர்களால் திட்டமிட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இப்படி மாணவர் மத்தியில் மோதலை உருவாக்க திட்டமிடும் பார்பன பயங்கரவாதிகளை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

மாட்டிறைச்சிக்கு தடைவிதித்து தாழ்த்தப்பட்ட இசுலாமிய பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும், உணவு உரிமையையும் பறித்திடும் நோக்கில் அறிவிப்பு ஆணை வெளியிட்டிருக்கும் மத்திய பா.ச.க மோடி அரசிற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ஐ.ஐ.டி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மேலும் தாக்குதல் நடத்துவோம் என்றும் பார்ப்பனத் திமிரோடு கூறியிருக்கும் ஏபிவிபி மாணவ அமைப்பினரின் செயல் என்பது.
வட மாநிலங்களில் பசுவதை தடுப்பு என்ற பெயரில் நடந்தேறிய பல வன்செயல்களை தமிழகத்திலும் அரங்கேற்ற திட்டமிட்டிருப்பதாகவே தெரிய வருகிறது. இந்த கொலைவெறிச் செயலுக்கு காரணமான பார்ப்பன வெறிகொண்ட மாணவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
தாக்குதலுக்கு ஆளாகி கண் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர் சூரஜ் க்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதோடு,
மாணவர் மீதான இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, கேரளமுதல்வர் கடிதம் எழுதியிருப்பது பா.ச.க விற்கு காவடிதூக்குக் எடப்பாடியின் கையாலாகாதத் தனத்தையே காட்டுகிறது, இப்படி மோடிக்கு காவடி தூக்கும் வேலையை மட்டுமே தமிழக அரசு செய்து கொண்டிருப்பதால்தான் இதைப்போன்ற அண்டை மாநில முதல்வரிடம் இருந்து ஆலோசனைக் கடிதம் வருகிறது,
நாடே தங்களை பற்றிய நிலையை அறிந்திருக்கும் போது தமிழக மக்கள் அறியாமல் இல்லை, இதேநிலை இப்படியே நீடிக்குமே ஆனால் எப்போதும் போல் அமைதியான வழியில் தமிழக மக்கள் போராடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என்பதை எடப்பாடி அரசிற்கு எச்சரிக்கையாக சொல்வதோடு,
இனிமேலும் தமிழக அரசு மவுனம் காக்காமல்,
மோடிக்கு பயந்து மாட்டிறைச்சிக்கான தடை விடயத்தில் அமைதிகாப்பதுபோல் மாணவர் தாக்குதலிலும் அமைதிகாக்காமல் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டு பார்பனிய காவி பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
தலைமையகம் கோவை
31.5.2017


No comments:

Post a comment