அண்மையச்செய்திகள்

Thursday 18 May 2017

துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குறைதீர்க்கும்கூட்டம் நடத்த வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது

துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குறைதீர்க்கும்கூட்டம் நடத்த வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது 

ஆதித்தமிழர் பேரவை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கு.கி கலைக்கண்ணன் வழங்கிய செய்தியாளர்கள் சந்திப்பில் விவசாயிகளுக்கு ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த படுவது போல துப்பரவு பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை வைக்கிறது. ஏனெனில் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்க்கும் தளங்களில் மாற்று சமூகத்தினர் பலர் துப்பரவு பணி செய்யாமல் துப்பரவு பணி செய்பவர்கள் என பணி நியமன ஆணை பெற்று வைத்துள்ளனர்.

துப்பரவு பணியாளர்களில் குறிப்பாக பெண்களுக்கு தாங்கள் வேலை பார்க்கும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது, மேலும்  பணி மூப்பு அடிப்படையிலும் அவர்களின் கல்வி அடிப்படையிலும் உயர் பதவியில் பணி உயர்வு பெறுவதற்கு தடை விதிக்க படுகிறது அவர்களுக்கு உயர் பதவிகளுக்கு வர தகுதிகள் இருந்தும் அவர்கள் பணி உயர்வு பெறாதவாறு அங்குள்ள மேலதிகாரிகளால் தடுக்கப்படுகின்றனர்.துப்பரவு பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்பு வரக்கூடிய பண தவணைகளை கொடுக்காமல் , அதனை கொடுப்பதற்கு லஞ்சம் கேட்டு மேலதிகாரிகள் துணுபுறுத்துகின்றனர் .இதனால் துப்பரவு பணியாளர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் பெரிதும் கஷ்ட நிலையில் தங்கள் வாழ்க்கையை  வாழ்ந்து வருகின்றனர் .அதுமட்டும்மல்லாமல் அரிசியல் கட்சி தலைவர்கள் , அரசு ஊழியர்கள் போன்றோர்களின் இல்லங்களில் துப்பரவு பணியாளர்களை விதிமுறைகளை மீறி பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் ,இவர்களின் இல்லங்களில் செப்டிக் டங் சுத்தம் செய்ய கட்டாய படுத்தப்படுகிறார்கள், இதனை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை வேலையை விட்டு நீக்கிவிடுவோம் என்று மிரட்டும் அவல நிலை நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது .

உச்ச நீதிமன்ற தீர்ப்பை  நடைமுறை படுத்தாமல் அத்தீர்ப்பை மீறும் வகையில் ஓடைகளிலும் ,சாக்கடைகளிலும் எந்த வித பாதுகாப்பு உபகாரணங்களுமின்றி துப்பரவு பணியாளர்களை பணியில் அமர்த்துகிறார்கள் ,இரண்டு நாட்களுக்கு முன்பு கீழப்பாவூர் பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தொடர்ச்சியாக துப்பரவு பணியாளர்களை தனியார் உணவகங்களில் ஏற்படுகின்ற பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்காக இரவு நேரங்களில் விதிமுறைகளை மீறி இரக்கி வேலை வாங்குகின்றனர்.இதனால் பல்வேறு இடங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் துப்பரவு பணியாளர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது .

இது போன்ற பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் துப்பரவு பணியாளர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டுமென்றால் விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது போல் துப்பரவு பணியாளர்களுக்கும்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த பட வேண்டும் ,இக்கூட்டம் நடத்தும் பட்சத்தில் துப்பரவு பணியாளர்கள் சந்தித்து வரும் குறைந்தளவு பிரச்னைகளாவது முடிவுக்கு கொண்டு வரும் என்ற அடிப்படையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் இந்த கோரிக்கையை முன்வைத்து பத்திரிகையாளர் மன்றத்தில் தெரிவிக்கிறோம்.

துப்பரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த படவேண்டும் என்ற எங்கள் கோரிக்கை செய்தியை மாவட்ட ஆட்சியருக்கு நாங்கள் தெரியப்படுத்துகிறோம். குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் காலம் தாழ்த்துவர்களேயானால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைத்து துப்பரவு பணியாளர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்து கொள்கிறோம்

கு கி கலைக்கண்ணன்
மாவட்ட செயலாளர்
நெல்லை கிழக்கு
ஆதித்தமிழர் பேரவை

No comments:

Post a Comment