அண்மையச்செய்திகள்

Monday, 8 May 2017

ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் விரட்டி அடிப்பு

ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் விரட்டி அடிப்பு
"""""'''"'''''""'"""""
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6 விழுக்காடாக உயர்த்த வலியுறுத்தி உயிர் ஈகம் செய்திட்ட போராளி மகேஸ்வரன் இல்லத்திற்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சி அர்ஜுன்சம்பத்தை ஆதித்தமிழர் பேரவை தலைமை நிலைய செயலாளர் தம்பி வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சோழன், உள்ளிட்ட வாவிபாளையம் கிளை நிர்வாகிகளும், மகேஸ்வரன் கும்பத்தாரும், அருந்ததியர் பொதுமக்களும் திரண்டெழுந்து
இட ஒதுக்கீட்டின் எதிரியே!
இந்துமத வெறியனே!
அர்ஜுன் சம்பத்தே!
ஆணவக் கொலைகளை ஊதிப் பெரிதாக்கும் ஆதிக்க சாதிகளின் கைக்கூலியே!
போராளி வீட்டிற்கு வராதே!
புரட்சி மண்ணை கலங்கப் படுத்தாதே!
என.. முழக்கமிட்டு காவல்துறையை கதிகலங்க வைத்து கருப்புக் கொடியேந்தி பெரியாரின் பேரன்களாக அம்பேத்கரின் வாரிசுகளாக அதியமானின் தம்பிகளாக ஆர்த்தெழுந்து
அர்ஜுன் சம்பத்தை விரட்டி அடித்த போராளிகளுக்கு வாழ்த்துக்கள் பல..
ஆர்.எஸ்.எஸ் எந்த வடிவில் வந்தாலும் அதை அடித்து நொருக்கும் நீலப்படை! என மீண்டும் நிரூபித்துக் காட்டிய கொள்கை வாதிகளை பாராட்டுவோம்! போராளிகளை ஊக்கப்படுத்துவோம்!
நீலவேந்தன் தம்பிகளாக பகுதிப் பொறுப்பாளர்களை வார்த்தெடுத்த போராளி மகேஸ்வரனின் மண், வீரம் செறிந்த மண். என்பதை நிரூபித்த வாவிபாளையம் கிளை நிர்வாகிகள் மூர்த்தி, குமார், மணி, மோகன்ராசு, ஜீவா ஆகியோரே! அடுத்த தலைமுறையின் தளபதிகள்.
இவர்கள் இருக்கும் வரை எந்த கொம்பாதிக் கொம்பனாலும் பெரியார் மண்ணை பிரிக்க முடியாது.
---நாகராசன்.No comments:

Post a comment