அண்மையச்செய்திகள்

Sunday 28 May 2017

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரி தீக்குளித்து உயிர்நீத்த மகேசுவரனின் வீரவணக்க பொதுக்கூட்டம் திருப்பூர் வாவிபாளையதில் நடைபெற்றது.


 அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி திருப்பூர் பூங்கா சாலையில் கடந்த 12.4.2017 அன்று தீக்குளித்து உயிர் ஈகம் செய்திட்ட திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் வாவிபாளையம் மாவீரன்.மகேசுவரன் நினைவேந்தல் மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டம் நேற்று 28.5.2017 மாலை 6 மணிக்கு வாவிபாளையதில் நடைபெற்றது. முன்னதாக மாலை 4.30 மணியளவில் அவர் உயிர் தியாகம் செய்திட்ட பூங்கா சாலையில் பேரவை நிறுவனர்/தலைவர் அய்யா அதியமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம்.1
"""""""""""""""""
இரங்கல் தீர்மானம்
""""""""'''''''''"''''''''''''''''''''"'''
சமூகநீதி அடிப்படையில் அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும், 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை இவர்களது சமூகநிலைக்கும் மக்கள் தொகைக்கும் ஏற்றவாறு 6 சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி உயிர் ஈகம் செய்திட்ட பேரவை திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வாவிபாளையம் மகேசுவரன் அவர்களுக்கும், பேரவை மேனாள் மாநில நிதிச்செயலாளர் தோழர் வழக்கறிஞர் நீலவேந்தன் மற்றும் பேரவை மேனாள் மாநில மகளிரணிச் செயலாளர் தோழர் திருச்சி ராணி அவர்களுக்கும், இந்த கூட்டம் தனது இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்.2
"""""""""""""'''''
மாட்டுக்கறிக்கு விதித்திருக்கும் தடைக்கு எதிரான தீர்மானம்
"""""''''''''''''''''''''''''''''''''''''''
பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது.
பசு மாடு மட்டுமல்ல காளை, எருமை, கன்றுக்குட்டி, கறவை ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்கக்கூடாதாம்.

சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம்.

வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம். இப்படி கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம்.
இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர் வருவாய் அலுவலர் கால்நடை மருத்துவரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே சமைத்த உணவை குடும்பத்தினர் சாப்பிடவேண்டும் என்று அவசர சட்டம் கூட வரலாம். ஆச்சரியப் படுவதற்கில்லை.

மோடி ஆட்சியின் இந்த சர்வாதிகாரச்சட்டம் விளிம்பு நிலை மக்களுக்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட சட்டம், தனது வாழ்வாதரத்திற்கு போராடும் விவசாயி பயன்தராத மாடுகளை எப்படி காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும். இந்த அதிகார அடக்குமுறையை மக்கள் பொறுமையாக சகித்துக் கொண்டிருக்கவே மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் திமுக, உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது, கேரள மாநில முதல்வர் இதனை ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டம் என்றுகூறி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மாநில உரிமைகளை காலில் போட்டு மிதித்து மக்களின் வாழ்வாதாரம் உணவு உரிமைகளை தடுப்பதோடு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை விளிம்பு நிலை மக்களின் தொழில் வணிகங்களுக்கு பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன.

அனைத்திற்கும் மேலாக இந்தியா முழுமைக்கும் ஆர்.எஸ்.எஸ் அதிகார கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய முயற்சியாக பார்ப்பனியமே இந்தியா.

பார்ப்பன பண்பாடே இந்திய பண்பாடு என்றவகையில் ஏற்று அடிபணிந்து வாழவேண்டும் என்பதுதான் குடிமக்களின் கடமை என்ற ஒற்றைப் பார்ப்பன கலாச்சாரத் திணிப்பை மேடியின் அரசு அறிவித்துள்ள ஆணை நிலை நிறுத்துகிறது.

இதன் மூலம் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களின் எளிய உணவாக, சத்தான ஒரே புரத உணவாக இருக்கும் மாட்டிறைச்சியை உண்பதற்கு தடைவிதித்திருப்பது, தாழ்த்தப்பாட்ட இசுலாமிய சிறுபான்மை மக்களின் வெறுப்பு அரசியலையையே இது காட்டுகிறது.

எனவே மோடி அரசு கொண்டு வந்திருக்கும் மாட்டிறைச்சி உண்பதற்கான தடைச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம்.3
*************
உயிர் ஈகம் கூடாது
கண்டிப்புத் தீர்மானம்
""""""""""""""""""""""""""""""""
போராடி சாதிக்க வேண்டிய தோழர்கள் தன்னைத் தானே எரித்துக் கொண்டு தற்கொலைப் போராட்டங்கள் நடத்துவது பேரவையின் கொள்கைக்கு எதிரானது, 2013 செப்டம்பர். 26. ல் தோழர் நீலவேந்தன் அவர்களும், அதே ஆண்டு நவம்பர். 26 ல் தோழர் ராணி அவர்களும், தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட மனவலி குறையும் முன்பே, தற்போது தோழர் மகேஸசுவரன் அவர்களும் அதே வழியில் உயிர் ஈகம் செய்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே இனிமேல் இது போன்று உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என பேரவைத் தோழர்கள் அனைவரையும் இந்த கூட்டம் கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்.4
"""""""""""""""""
தளபதியாருக்கு
நன்றி தீர்மானம்
"""""""""""""""""""""""""""
தோழர் மகேசுவரனின் உயிர் ஈகச் சம்பவத்தை அறிந்த திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்கட்சி தலைவருமான மாண்புமிகு, மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வருத்தத்தையும் இரங்கலையும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக தெரிவித்துக் கொண்டதோடு, தி.மு.க. மாநில பொறுப்பாளரையும், திருப்பூர் மாவட்ட செயலாளரையும் மகேசுவரனின் இல்லத்திற்கு நேரில் அனுப்பி வைத்து அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்லியது, அருந்ததியர் மக்கள் மீது தி.மு.க கொண்டிருக்கும் மாறாத பற்றையும் அக்கரையையும், காட்டுகிறது. தோழர் மகேசுவரனின் உயிர் ஈகத்திற்கு மதிப்பளித்து அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்த மரியாதைக்குறிய தளபதியார் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இந்த கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்.5
*************
தமிழக அரசை வலியுறுத்தி
"""''''''''''"'"'"""'''''''''''
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் மூன்றில் ஒருபங்காக வாழக்கூடிய அருந்ததியர் மக்களுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ள 3 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப் படுத்தாமலும், அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்படும் பணி வாய்ப்பு நியனங்களில் இன்ன பிற சமூகத்தை சார்ந்தவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு மாற்றி வழங்குவது போன்ற முறைகேடுகளும் நடந்து வருகிறது, இதை தற்போதைய அரசு கண்டும் காணாமல் இருப்பது அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்டும் அநீதியாகும். எனவே தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தி அருந்ததியர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டுப் பலன்களை முழுமையாக கிடைத்திட கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று இந்த கூட்டம் தமிழக அரசை வற்புறுத்துகிறது.

தீர்மானம்.6
*************
சமூகநீதிப் போராளிகளாக அறிவிக்க கோரும் தீர்மானம்
"""""""""""""""""""""""""""""""""""""
அருந்ததியர் மக்களின் முன்னேற்றத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது, இவர்களின் மக்களின் மக்கட் தொகைக்கு ஏற்றவாறு போதுமானதாக இல்லை என்பதனால் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகளான திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் நீலவேந்தன், திருச்சியை சேர்ந்த இராணி, மற்றும் திருப்பூர் வாவிபாளையத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மூவரும் அய்ம்பது லட்சத்திற்கும் மேல் உள்ள அருந்ததியர் மக்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டுமென தீக்குளித்து மரணமடைந்துள்ளனர், இவர்களின் தியாகத்திற்கு மதிப்பளித்து இவர்களை சமூகநீதிப் போராளிகள் என அறிவித்து உரிய அரசு மரியாதை அளித்திட வேண்டும் என தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

மேற்கண்ட தீர்மானங்களை தங்களது மேலான நாளிதழ் / தொலைக்காட்சியில் வெளியிட்டு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
______________
தலைமைக்காக
தலைமை நிலைய செயலாளர்

நாள். 28.5.2017
இடம். திருப்பூர்





No comments:

Post a Comment