அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

ஆதித்தமிழர் பேரவையில் சமத்துவக் கழகம் இணைப்பு நிகழ்வு

21.12.2016
ஆதித்தமிழர் பேரவையில் சமத்துவக் கழகம் இணைப்பு நிகழ்வு.
""""""""""""
ஆதித்தமிழர் பேரவையின் தலைமை அலுவலகமான "ஆதித்தமிழன் அரங்கத்தில்" பிற்பகல் 3.30 மணியளவில் தோழர் மு.கார்க்கி அவர்களை முதன்மை உறுப்பினராகக் கொண்ட சமத்துவக் கழகம் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் தலைமையில் இணைந்தது.
இந்நிகழ்வை பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் அவர்கள் நெறிப்படுத்தினார். நிகழ்வில் சமத்துவக் கழகத்தின் முதன்மை உறுப்பினர் மு.கார்க்கி, மற்றும் முதன்மைப் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர் கார்த்திக், ராமசந்திரன், எழுத்தாளர் ஜெயச்சந்திரன், ஏகலைவன், உள்ளிட்ட நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.
முன்னதாக பேரவையின் மாநிலக்குழு உறுப்பினர் தி.செ.கோபால் வரவேற்புரை நிகழ்த்தினார், துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ச.சு.ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினார்.
இணைப்பு நிகழ்வின் நிறைவில் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் தோழர் கார்க்கி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆடை போர்த்தி சிறப்பு செய்து பேரவையின் தொலை நோக்கு திட்டத்தினையும், அமைப்பின் கட்டமைப்பு விதிகள் பற்றியும் விளக்கமாக உரையாற்றினார். இந்நிகழ்வில் 25 க்கும் மேற்பட்ட சமத்துவக் கழகத்தின் முன்னணிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களை பேரவையில் இணைத்துக்கொண்டனர்.
இதே நிகழ்வில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.செந்தில்குமார், வழக்கறிஞர் இரவிக்குமார், அம்பேத்கர் மக்கள் இயக்க கோவை மாவட்ட செயலாளர் வி.கே.தேவராஜன், சுல்த்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் முகிலரசன், நாவலன் உள்ளிட்டோரும் தங்களை பேரவையில் இணைத்துக் கொண்டனர், நிகழ்வின் முடிவில் பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர் ஆவல்பட்டி மாரிமுத்து நன்றி கூறினார்.
____________________
தலைமைக்
குழுவிற்காக..
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை.
21.12.2016


No comments:

Post a Comment