அண்மையச்செய்திகள்

Tuesday, 27 December 2016

தருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் அருந்ததியர்களின் "அரசியல் அதிகார பகிர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்" நடைபெற்றது


இன்று 24.12.2016 பிற்பகல் 1.மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிருத்தி.. அருந்ததியர்களின்
"அரசியல் அதிகாரப்பகிர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்"
சிறப்பாக நடைபெற்றது

இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் சித்தார்தன் தலைமை தாங்கினார், பொதுச்செயலாளர் நாகராசன் அவர்கள் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார், பேரவையின் நிதிச்செயலாளர் ப.பெருமாவளன் கருத்துரை ஆற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் தமிழரசு உள்ளிட்ட தருமபுரி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்தனர். கருத்தரங்கில் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 80 பேர்கள் கலந்துகொண்டனர்.No comments:

Post a comment