அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

துப்புரவு பணி புரிவோர் அனைவரும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களே! மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்! -- ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் தொடர்நத வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு எதிராக ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது $உயர்நீதிமன்றம்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை தடை செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்தவும்,கண்காணிப்பு குழு அமைக்கவும், அனைத்து #நகரம் கிராம பஞ்சாயத்துகளில் கண்காணிப்பு குழு அமைக்கவும்,துப்புரவு பணி புரிவோர் அனைவரும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என அறிவிக்க வேண்டும் எனவும் இதனை மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு மத்திய மாநில அரசுக்களுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு #ஜனவரி 10ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்கள்.

ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில்
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 இல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிப்பதற்கான திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்திருக்க வேண்டும், #தொழில் நுட்ப கருவிகளை வழங்கி இருக்க வேண்டும்.
இத்தொழிலாளர்களை கண்டறிந்து வீடு, வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு கல்விக்கடன் வழங்குதல் உட்பட பல்வேறு மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்
இப்பணியில் ஈடுபட்டு விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித கழிவுகளை அள்ளுமாறு கட்டாயப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்வே உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறைகளில் இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் என அறிவிக்க வேண்டும்.
மத்திய மாநில மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை தடை செய்யும் சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டும். இத்தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு இம்மனுவில் குறிப்பிடபட்டிருந்தது.


No comments:

Post a comment