அண்மையச்செய்திகள்

Tuesday, 27 December 2016

புரட்சியாளர் யேசுவிற்கு ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!

திசம்பர்.25
'"""""""""""""”""
புரட்சியாளர் யேசுவிற்கு
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்!

உலககில் தோன்றிய முதல் புரட்சியாளரே!
தொண்டர் படை கட்டி தொண்டூழியம் செய்தவரே!!

தொட்டால் தீட்டு என்ற மண்ணில்
தொழுநோயாளிகளை தொட்டு மருத்துவம் செய்து
மனிதநேயத்தை விதைத்தவரே!

கல்வியை மறுத்த கயவர்களை எதிர்த்து
கடைக்கோடியில் தள்ளப்பட்ட மக்களை
கனிவுடன் அரவணைத்து
கல்வி கண்களை திறக்க காரணமானவரே!

அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராய் படைகட்டி
மக்களை மீட்க "சபை" என்ற சங்கம் நடத்தியவரே!

முன்னணியினரை "போதகராக" அறிவித்து
சபையை முன்னெடுத்து சென்று
மக்களை விழிப்பூட்டியவரே!

போதகரை காப்பாற்ற "தசமபாகம்" என்ற பெயரில்
சந்தாமுறையை உருவாக்கியவரே!!

உலகத்தில் தோன்றிய
முதல் புரட்சியாளரும் நீயே!

மக்களை அமைப்பாக்கும் முறையை
அறிமுகம் செய்தவரும் நீயே!!

மக்களை திரட்டி"ஜெபக்கூட்டம்"என்ற பெயரில்
போராட கற்றுத்தந்தவரே!

மொத்தத்தில்...
புலபுவது கேவலம்!
புறப்படு போர்க்களம்!!
என
மக்கள் இயக்கங்களுக்கு வழிகாட்டிய
முதல் புரட்சியாளரும் நீதான்,
மரணத்தை முத்தமிட்டு
மக்கள் மனதில் நிறைந்தவரும் நீதான்,

இப்படி..
மக்களை அமைப்பாக்கி மறுமலர்ச்சிக்கு
முற்பட்ட மகத்தான மனிதருக்கெல்லாம்
ஆதிக்க சக்தி தந்த பட்டமோ!
கிளர்ச்சிக்காரன், புரட்சிக்காரன்
கிடைத்த தண்டனையோ கொடுஞ்சிறை மரணம்.

போராளிகளை கொல்லத்தான் முடியும்!
வெல்ல முடியாது!!

புரட்சியாளரே உமக்கு
ஆதித்தமிழர்களின் வீரவணக்கம்.
____________________
நாகராசன்.பொ.செ.


No comments:

Post a comment