அண்மையச்செய்திகள்

Wednesday, 21 December 2016

மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆதித்தமிழர் பேரவை களத்தில்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு W.புதுபட்டியை சேர்ந்த அருந்ததியர் இளைஞன் காளிமுத்து 6 வருடங்களாக திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை ராமராஜபுரத்தில் கோனார் இனத்தைச்சேர்ந்த லிங்கம் என்பவரிடம் பண்ணை அடிமையாக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு ஆடு கானவில்லை நீதான் திருடி விற்றிருக்ககிறாய் என்று சொல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோருக்கு தகவல் கொடுத்தார் முதலாளி லிங்கம்.வாடிபட்டி மருத்துவமணையில் உடல் இருக்கிறது . அதன் பிறகு விருதுநகர் மாவட்டச்செயலாளர் ஈஸ்வரன் தகவலின் பேரில் மதுரை மாவட்ட செயலாளர் ஆதவன்.மாவட்டதுணைச்செயலாளர் செழியன்.இளைஞரணிச்செயலாளர் சாக்கியஅரசு. வாடிபட்டி ஒன்றியசெயலாளர் துளசிராம் சம்பவஇடத்திற்கு சென்று பண்ணை அடிமையாக வைத்திருந்த முதலாளி லிங்கம் மீது வண்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதின் அடிப்படையில் லிங்கத்தை கைது செய்தது காவல்துறை.காளிமுத்துவின் உடல் வாடிபட்டி மருத்துவமணையில் உள்ளது பிரேத பரிசோதனை செய்து தருகிறது காவல்துறை.மதுரை தோழர்களுடன் விருதுநகர் மாவட்டதலைவர் பச்சையப்பன் மற்றும் தோழர்கள்.No comments:

Post a comment