அண்மையச்செய்திகள்

Wednesday, 7 June 2017

கலைஞர்.94

கலைஞர்.94
""""""""""""""""""
ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்யும் மீனைப் போல..
வாழ்க்கை ஆதாரத்திற்காக
அடுத்தவன் கழித்த மலத்தை அள்ளி ஊரை சுத்தம் செய்யும் மனித மாண்பு மீட்சி பெற
உள் ஒதுக்கீடு பிரித்து தந்து மலமள்ளுவோர் வாரிசை மருத்துவராக்கிய தலைவரே!

உம்மை என்ன சொல்லி வாழ்த்துவது!
பெரியார் வழி வந்தவரே
பேனா வலிமை மிக்கவரே
தமிழர் உரிமை மீட்சிக்கும்
சமூகநீதி நீட்சிக்கும்
சாதனை பல புரிந்தவரே!
சரித்திரமாய் வாழ்பவரே!!
சாதிக்கு ஓர் வீதி என்று
சனாதனத்தின் நீதி என்று
சண்டாளனும் சூத்திரனும்
தனித்தனியே குடியிருக்க
சமநீதி சமூகம் காண!
சமத்துவபுரம் கண்டவரே!!
கோவிலுக்குள் நுழைவதற்கு
சேரிகளுக்கு தடைவிதித்து
எதிர்த்திட்ட வேதங்களை
பெயர்த்திடும் பாறையாய்
பிறப்பின் பேதம் நீங்க
அர்ச்சகராக்கி காட்டியவரே!
பாராட்டும் அவதூறும்
பலநூறு கண்டவரே
பராசக்தி படம் மூலம்
பகுத்தறிவை விதைத்தவரே
சட்ட சபையில் வைரவிழா!
சாதனைக்கு ஏற்றவிழா!!
ஆன்மீகமே கதியென்று
அரிதாரம் பூசிதெல்லாம்
அற்ப ஆயுளில் போகுது
ஆண்டவனே பொய்யென்று
நாத்திகனாய் வாழ்ந்தனால்!
அகவை 94 தாண்டுகிறாய்!!
ஆரியர்கள் நடுங்கிட
அன்னைத் தமிழ் காத்திட
கர கரத்த குரலெழுப்பி
காளையர்களை உசுப்பிட
பெரியாரின் தடி ஊன்றி
எழுந்து வா எம் தலைவா!
நூறாண்டு கடந்தும் நீ
நலமோடு வாழ வேண்டும்
வீழுகின்ற தமிழகத்தை
தாங்கி நிற்கும் காவலனாய்
தளபதியை தந்திட்டாய்!
தலைவிதியை மாற்றிட்டாய்!!
ஆதித்தமிழர் துணையுண்டு!
அதியமான் படையுண்டு!!
வாழ வேண்டும் பல்லாண்டு!
வளர வேண்டும் தமிழ்நாடு!!

No comments:

Post a comment