அண்மையச்செய்திகள்

Friday, 2 June 2017

தருமபுரியில் அரச பயங்கரவாதத்தால் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை அதே இடத்தில் 7 அடி உயரத்தில் வெண்கல சிலையாக உருவெடுக்கிறது.

தருமபுரியில் அரச பயங்கரவாதத்தால் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை அதே இடத்தில் 7 அடி உயரத்தில் வெண்கல சிலையாக உருவெடுக்கிறது.
"""""""""""""""""""""""""
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம், கடத்தூர் ஊராட்சி தாதனூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்ட அருந்ததியர் பகுதிக்கு பேரவை பொதுச்செயலாளர் நாகராசன், தலைமை நிலைய செயலாளர் ஆனந்தன் ஆகிய தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் சிவன் என்ற சித்தார்த்தன் தலைமையில் 1.6.2017 நேற்று மாலை 7 மணிக்கு நேரில் சென்று தாதனூர் ஊர் அருந்ததியர் மக்களிடம் கலந்துரையாடல் நடத்தியதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.
கூட்டத்தில் பங்கேற்ற பெண்களும் பெரியவர்களும் இளைஞர்களும் தங்களது பகுதியில் அம்பேத்கர் சிலையை நிறுவியே ஆகவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து 7 அடி உயரத்தில் 600 கிலோ எடையில் 4.75 லட்சம் ரூபாய் பொருட் செலவில் வெண்கல அம்பேத்கர் சிலையை உருவாக்கி அதே இடத்தில் நிறுவுவது எனவும் 4 மாதங்களுக்குள்ளாக பணிகள் அனைத்தையும் நிறைவு செய்வதென உறுதி எடுத்து பணிகளை தொடங்கிவிட்டனர் அனைத்துப் பணிகளையும் பெண்களே முன்நின்று செய்கின்றனர்.
____________________
பொதுச்செயலாளர்.
ஆதித்தமிழர் பேரவை
2.6.2017.
சில நாட்களுக்கு முன்பு அண்ணல் சிலை அகற்றப்பட்ட செய்தி
http://atptamilnadu.blogspot.in/2017/05/blog-post_2.html

No comments:

Post a comment