அண்மையச்செய்திகள்

Friday, 2 June 2017

கவிக்கோ அப்துல்ரகுமான் மறைவிற்கு ஆதித்தமிழர் பேரவை ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

கவிக்கோ அப்துல்ரகுமான் மறைவிற்கு ஆதித்தமிழர் பேரவை ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
"""""""""""""""""""""""""""""""""
தலைவர் அதியமான் இரங்கல் செய்தி
சமத்துவம் பாடிய கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிடார் என்ற துயர செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன், அவரது மறைவிற்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிப்படைப்பில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்ட சமத்தும் பாடிய கவிஞர் அப்துல்ரகுமான் அவர்கள், சிறந்த படைப்பப்பாளியாக இலக்கியவாதியாக விளங்குயதோடு தனது கவி ஆற்றல் மூலமாக தமிழனுக்கு தன்மான உணர்வையும், சுய மரியாதைச் சிந்தனைகளையும் ஊட்டியவர், தமிழர்களுக்கான உரிமைக்களத்தில் தனது புரட்சிகர கவி மூலம் தமிழக மக்களை தட்டி எழுப்பியவர். நால்வர்ண சாதிய சனாதன கோட்பாடுகளை தோலுரித்துக் காட்டிய பார்பனிய எதிர்ப்புப் போராளியாக விளங்கியவர்,
தலைவர் கலைஞர் உள்ளிட்ட பெரியாரிய சிந்தனையாளர்கள் மற்றும் அம்பேத்கரிய இயக்க தலைவர்கள் மத்தியிலும் மாறாத பற்றும் அன்பும் கொண்டவராய் திகழ்ந்தவர் அவரது இழப்பு கவிதைப் படைப்பாளிகளுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வவதோடு சமத்துவக் கவிஞர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை
2.6.2017

No comments:

Post a comment