அண்மையச்செய்திகள்

Tuesday, 10 May 2016

திண்டுக்கல் மேற்கு(ஒட்டன்சத்திரம்) தொகுதி நாகனம்பட்டிபகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சார பொதுகூட்டம்0.5.2016 திண்டுக்கல் மேற்கு (ஒட்டன்சத்திரம்) நாகனம்பட்டி
""""""""""""""""""""""""""
திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள அருந்ததியர் மக்கள் வாழும் பகுதிகளில் அருந்ததியர் மக்களை நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் ஆட்சியில் அருந்ததியர் சமூகத்திற்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி தொகுதி வேட்பாளர் சகோதரர் அர.சக்கரபாணி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார், கூட்டத்தில் நூற்றுக்கணக்கான அருந்ததியர் பெண்கள் திராளக கூடி எழுச்சியோடு வரவேற்பு அளித்ததோடு அருந்ததியர் சமூக மக்கள் அனைவரும் திமுக.விற்குதான் வாக்களிப்போம் என்று தலைவர் அதியமான் அவர்களிடம் உறுதியளித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேரவையின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் விடுதலை சிறப்பாக செய்திருந்தார்.

உடன் மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.


அய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும் 1
No comments:

Post a comment