அண்மையச்செய்திகள்

Wednesday, 4 May 2016

நாமக்கல் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் தலைமையில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ((படங்கள் மற்றும் வீடியோ ))

4.5.2016 திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி
வேலூரில்_ஆதித்தமிழர்_பேரவை‬ சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் நிறுவனர் அய்யா அதியமான்‬ உரையாற்றினார்.
அவர் பேசும் போது..
இன்றைக்கு பல்லாயிரக்கணக்கிலே திரண்டு வந்திருக்கும் அருந்ததியர் மக்களின் ஆர்வத்தையும் எழுச்சியையும் பார்க்கின்ற போது மேற்கு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றே உணரமுடிகிறது. அதனடிப்படையில் தலைவர் கலைஞர் ஆட்சி அமைவதும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே நாம் நன்றி உள்ள சமூகம் என்பதை நிரூபிக்க நம் மத்தியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதே நமக்கான இப்போதைய கடமை என்று அருந்ததியர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அய்யா அதியமான் அவர்கள் உரையின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்

No comments:

Post a comment