அண்மையச்செய்திகள்

Monday, 19 September 2016

ராம்குமாரின் மர்ம மரணம்: தமிழக அரசுதான் பொறுப்பு - ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்


இரங்கல்
"""""""""""""
ராம்குமாரின் இந்த மர்ம மரண துயர நிகழ்வால் அவரை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் கண்டனம்.
""""""""""""""
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று சிறையில் தற்கொலைச் செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சிறைத்துறை சொல்வதும் அதையே தமிழக அரசும் சொல்வது நம்பும் வகையில் இல்லை. இந்த மர்ம மரணத்தில் இருக்கும் முடிச்சுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது, மேலும் ராம்குமாரின் மர்ம மரணத்தின் மூலம் சுவாதி கொலையில் மறைந்துள்ள உண்மைகள் வெளி உலகுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு விடக்கூடாது.

சுவாதி படுகொலையில் பல உண்மைகள் மர்ம முடிச்சுகளாகவே உள்ளது, இதில் ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று அவரது பெற்றோருடன் பல தரப்பினரும் சொல்லி வருகின்றார்கள். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் அரசு நிர்வாகம் காடியதால்தான், இந்த மர்ம மரணம் நடந்துள்ளது. எனவே இந்த மர்ம மரணத்திற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பை ஏற்கவேண்டும்.

ராம்குமாரின் மரணம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு உயர் விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தமிழக ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சாதி ஆணவப் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் வேதனையையும் அச்சத்தையும் அளிக்கிறது எனவே தமிழக அரசு இதில் முழுப் பொறுப்பேற்று உரிய நடவடிக்களை விரைந்து மேற்கொண்டு முழுமையாக இதை கட்டுப்படுத்த வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை கேட்டுகொள்கிறது.

இவண்
இரா.அதியமான்
நிறுவனர், அதித்தமிழர் பேரவை.
19.9.2016No comments:

Post a comment