அண்மையச்செய்திகள்

Tuesday 13 September 2016

விநாயகன் சிலை வைத்ததால் தாக்கப்படட தலித் மக்களை ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் சந்திததார்.

விநாயகன் சிலை வைத்ததால் தாக்கப்படட தலித் மக்களை ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் சந்திததார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

*கோவை பெரியதடாகம் பகுதியில் பேரவை நிறுவனர்*
*அய்யா அதியமான்.
""""""""""""""""""""""""""""""""
கோவை பெரியதடாகம் பகுதியில் வினாயகருக்கு விழா எடுத்ததனாலும், துடும்பு (தப்பு) அடிக்க மறுத்தனால் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பத்தைச் சேர்ந்த அருந்ததியர்களை இதே பகுதியில் குடியிருந்து வரும் 300 க்கும் மேற்பட்ட பூலுவக்கவுண்டர் சமூத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு ஆதரவாகவும் தோழர்கல் வழக்கறிஞர் கார்க்கி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அந்தந்த அமைப்புகள் போராடிவருகின்றர்,

இந்நிலையில் நேற்று 13.9.2016 மாலை 4 மணியளவில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆருதல் கூறினார். மேலும் இந்த பகுதியில் பெரும்பான்மையாக அருந்ததியர் மக்களை குடியேற்ற ஏற்பாடு செய்யுங்கள் என்றும், இவ்வளவு பிரச்சினைக்குப் பிறகு அவர்களிடம் யாரும் அடிமை வேலைக்கு செல்லாதீர்கள் என்றும் மக்களுக்கு அறிவுரை கூறினார்.

தற்போது அருந்ததியர் மக்களுக்கு வேலை மறுப்பு பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தர மறுப்பு.

வன்கொடுமை தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினர் 17 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கம் போல் காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

தற்போது சாதி இந்துப் பெண்கள் வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று அந்தபகுதி மலைமேல் ஏறிக் கொண்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.
_____________________
பதிவு
பொதுச்செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை
13.9.2016









No comments:

Post a Comment