அண்மையச்செய்திகள்

Friday, 30 September 2016

*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 236 நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்த அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை

*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 236 நினைவு நாளில் (அக்டோபர் 11) சிவகங்கையில் அமைந்துள்ள வீரத்தாயின் நினைவிடத்திற்கு வீரவணக்கம் செலுத்த குடும்பம் குடும்பமாக அணிதிரள்வோம் வாரீர். -- அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்*
**********************
ஆங்கிலயேர்களை எதிர்த்து தமிழ் மண்ணில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்பு போராட்டத்தில் ஒண்டிவீரன்,பூலித்தேவன்,சுந்தரலிங்கம்,வீரபாண்டிய கட்டபொம்மன் ,போன்ற தியாகிகள் பட்டியலில் சிவகங்கை சீமையின் இராணி வேலுநாச்சியார் ,மருது பாண்டியர்கள் ,வீரத்தாய் குயிலி போன்றவர்களின் வீரம் செறிந்த வரலாறுகள் அழிக்க முடியாதது.

ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் நீர்மூழ்கி கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தியாகமே தற்கொலை போராட்டத்தின் துவக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலக போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து தமிழ்மண்ணில் நடைபெற்ற போர்களத்தில் தான் முதன் முதலாக "தற்கொலை போராளி" உருவானார்கள் என்பது நாம் அறியாதது.

அந்த ஈகைக்கு உரிய வீரமங்கையின் பெயர் "குயிலி" அவள் பெண் என்பதால் மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட அருந்ததியர் என்பதுவும் வரலாற்றை பக்கங்களில் அவள் வஞ்சிக்க பட்டிருக்கிறாள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

1780ம் ஆண்டு வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு திப்புசுல்தான் உதவியுடன் ஆங்கிலேயரிடம் கையிலிருந்த சிவகங்கையை மீட்டதற்காக மதுரையில் இருந்து தனது போர்படையுடன் வெற்றிவாகை சூடி வந்தார். விஜயதசமி திருவிழா சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுவர்.இதை சாதகமாக பயன்படுத்தி இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்கள் வேலுநாச்சியார் ,குயிலி தலைமையிலான உடையாள் படையினர் கைகளில் ஆயுதங்களோடு  உள்ளே நுழைந்தனர்.போர் மூண்டது அரண்மனை வெளியில் மருது சகோதரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.வேலுநாச்சியார்,குயிலி தாக்குதல்களை சற்றும் எதிர்பாராத ஆங்கில தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்த போர் இது வரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களுக்கு முன்பு வேலுநாச்சியார் படை தாக்கு பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகி கொண்டிருந்தது. அரண்மனையிலிருந்து , ஆயுத கிடங்குகளிலிருந்தும் மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கில படைக்குச் சென்று கொண்டிருந்தது. என்ன செய்வதனை சிந்திக்க கூட முடியாத சூழலில் ஓர் உருவம் எரி நெய்யை ஊற்றி கொண்டு அரண்மனை ஆயத கிட்டங்கியில் குதித்தது.
 மறுநிமிடமே ஆயுத கிட்டங்கி வெடித்து சிதறியது உடல்கள் அங்கம் அங்கமாக சிதறியது. அவ்வுருவம் சுக்கு நூறாகி போனது. ஆயுத கிட்டங்கியில் அழிப்பு வேலுநாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.ஆயிரக்கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கில தளபதி பாஞ்சோர் வேலுநாச்சியாரிடம் மன்னிப்பு கேட்டு புறமுதுகு காட்டி ஓடினான்.வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டார்.வெற்றியை கொண்டாட தன் தளபதிகளெல்லாம் நெருங்கி கொண்டிருந்த பொழுது குயிலியை தேடினார் வேலுநாச்சியார். குயிலியை கண்டறியாத முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தாள் குயிலி.
    சிவகங்கை மண்ணை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விரட்டிட இராணி வேலுநாச்சியாரின் சபதம்  நிறைவேற்றிட தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன வீரமங்கை குயிலியின் வீரம் இந்த தலைமுறைக்கு எடுத்து சொல்லப்பட வேண்டும். உலகில் தற்கொலை போராளிகளுக்கான விதை தமிழ் மண்ணில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குயிலியால் விதைக்கப்பட்டுள்ளது.ஈழத்தில் கரும்புலிகளின் ஈடு இணையற்ற தியாகம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயாத்தியது என்றால் மிகையாகாது.அதுபோல் வீரத்தாய் குயிலியின் ஈகமும் தமிழர்களின் தியாக உணர்வை பறை சாற்றுகிறது
 
     தென்மாவட்டத்தின் தியாகி இம்மானுவேல் சேகரனின் படுகொலைக்கு பின்னர் தேவேந்திர மக்கள் எழுச்சியுற்றனர்.
ஆனால் தன் சமூகம் இழிவிலிருந்து விடுதலை பெற வேண்டும் என எந்த சமூகத்திலும் நடைபெறாத உயிர் தியாகம் அருந்ததியர் சமூகத்தில் அதுவும் ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொருளாளர் பழ.நீலவேந்தன் (வழக்கறிஞர்) அவர்களும் மற்றும் மாநில மகளிரணிச் செயலாளர் திருச்சி ஆ.இராணி அவர்களும் அருந்ததிய மக்களின் விடுதலைக்கு அடித்தளமாக இருக்கும் அருந்ததியர் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என தங்களையே தீக்கிரையாக்கி உயிர் நீத்த பின்பும் கூட இன்னும் எம்மக்கள் விழிப்படையாமல் இருப்பது நமது கள்ப்பணியை இன்னும் வீரியத்துடன் செய்லபட வேண்டுமென்பதை உணர்த்தி நிற்கிறது.
   மேலும் இச்சமூகத்தில் எல்.சி.குருசாமி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 1923இல் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வறுமையின் காரணமாக கல்வி கற்க முடியாத நிலையில் இருந்த குழந்தைகள் கல்வி கற்பதற்காக பல இரவு பாட சாலைகளை நிறுவினார்.மேலும் இக்குழந்தைகள் கல்வி கற்பதற்க்காக மத்திய உணவு திட்டத்திற்கும்,ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும் முதன் முதலில் சட்டசபையில் கோரிக்கை வைத்தவர் எல்.சி.குருசாமி. அவர்கள்.

அவ்வழி தோன்றல் தான் ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அய்யா அதியமான் அவர்கள் 1994-ல் தொடங்கப்பட்ட ஆதித்தமிழர் பேரவை பல போராட்டங்களும் ,மாநாடுகளும் நடத்தியதின் அடிப்படையில் தான் 2009-ம் ஆண்டு அருந்ததியர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தது.இவ்வாறு அருந்ததியர் வாழ்வில் உயர் நிலை வெளிச்சத்தை ஏற்படுத்தியவர் அய்யா அதியமான் அவர்கள் வழியில் நமது உரிமைகளை வெல்வோம். வென்றெடுப்போம்.

ஆதித்தமிழர்களே!!! ஆதித்தமிழச்சிகள்!! வீரத்தாய் குயிலி நினைவு நாளில் குடும்பம் குடும்பமாக ஒன்றுபடுவோம்!!! வாரீர்.... வாரீர்

புரட்சியாளர் அம்பேத்கார் வழியில் புரட்சி செய்வோம் !!!

தந்தை பெரியார் வழியில் கலகக்காரர்களாவோம் !!!
 
பேராசான் மார்க்ஸ் போல் தத்துவங்கள் படைப்போம் !!
மேதகு பிரபாகரன் போல் போர்க்குணம் கொண்ட போராளியாவோம் !!

ஆதித்தமிழர்களின் விடுதலை முகவரி தலைவர் அய்யா அதியமான் அவர்கள் வழியில் அமைப்பாவோம்
"ஆதித்தமிழர்பேரவை வலுப்படுத்துவோம்,ஆதித்தமிழர்களின் விடுதலையை விரைவாக்குவோம்"
_______
ஆதித்தமிழர் பேரவை சிவகங்கை மாவட்டம்

No comments:

Post a comment