அண்மையச்செய்திகள்

Monday, 31 July 2017

தேனி அல்லிநகரம் நகராட்சியில் துப்பரவு தொழிலாளினியின் அவலம்


#தேனி #நகராட்சி #அலட்ச்சியத்தால் #கொடுமை!!
#வெட்கக் #கேடு!!
#வேதனை!!
""""""""""""""""""""""""""""""""""""""""
தேனி அல்லிநகரம் நகராட்சியில் துப்பரவு(அரசு ஊழியர் )பணி செய்பவர் தோழர் #சேகர்(53) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி 1st Division. 4 th Ward வீரப்பைய்யர் கோவில் தெருவில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் (நகராட்சி அலட்ச்சியத்தால் பாதுகாப்பு உபகரணம் வழங்காததால்) குப்பைகள் அப்புறப்படுத்தும் போது தோழர் சேகரின் கை விரலில் ஊசி குத்தி ரத்தம் வடிந்துள்ளது.அதை Ward Maestri கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதை அவர் I st Aid கூட செய்திட மறுத்து, "சின்னக்காயம் தானே சீக்கிரம் ஆறிடும். நீ போய் வேலையைப் பாரு" என்று அலட்சியமாக கூறியுள்ளார்.

இரண்டு நாள் கழித்து நகராட்சி சுகாதார அலுவலர்களிடம் "அய்யா கை வலிக்கிறது" என்று கூறியுள்ளார்.அதற்கு சுகாதார அலுவலர்கள் முறையான மருத்துவ ஆலோசனை வழங்காமல் தனியார் (காசு பறிக்கும்) மருத்துவமனைக்கு போகச்சொல்லியிருக்கிறார்கள்.அவரும் அதிகாரி பேச்சை கேட்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார்.தனியார் மருத்துவமனையில் வழக்கம் போல் காசை கறந்து கொண்டு மதுரை தலைமை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அவர்களும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.அங்கு
சேகருக்கு சரியான சிகிச்சையும்
வழங்கப்படவில்லை.
தோழர்
தேனி நீலக்கணலன்-9543349956- (மா.தொ.பேரவை)அவர்கள் மூலம் அறிந்து, பாதிக்கப்பட்டவரின் சிகிச்சைகள் குறித்தும்,மருத்துவரிடமும்
தோழர்.பா,ஆதவன்(ம.பு.மா.செயலாளர்).
தோழர், இரா.அன்புச்செழியன்(துணைச் செயலாளர்) .
தோழர்.பெரு.தலித்ராஜா (துணைத்தலைவர்) .
ஆகியோர்கள் இன்று (30-7-2017/காலை 7 மணிக்கு) நேரில்சென்று சந்தித்து முழு விபரங்களையும், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை (ஒரு கை செயலிலைந்த நிலையில்) தோழர் சேகரும் அவரது துணைவியாரும் கண்ணீருடன் எங்களுக்கு தெரிவித்தார்கள்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நம் கேள்வி:
=> பணிக்குச் செல்லும் முன் மருத்துவ பரிசோதனை ஏன் செய்யப்படவில்லை?
=> பாதுகாப்பு கவசங்களான கையுறை, காலுறை ஏன் வழங்கப்படவில்லை?
=> காயம் பட்டவுடன் சுகாதார ஆய்வாளர் நகராட்சி மருத்துவமனைக்கு ஏன் அழைத்துச்செல்லப்படவில்லை?
=> சிகிச்சைக்கான செலவினங்களை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வில்லையே ஏன்?
=> இதுவரை ஒரு நகராட்சி அதிகாரிகள் கூட வந்து பார்க்க வில்லையே ஏன்???
"""""""''"""""""'"""""""""""""""""""""""""""""
அரசு ஊழியருக்கொரு நீதி.
துப்பரவாளர்க்கொரு நீதியா????
""""""""""""""""""""""""""""""""""""""""""""
நீதிக்கான போராட்டத்தை விரைவில் முன்னெடுப்போம்.
By,
புறநகர் மாவட்ட செய்திப் பிரிவு.
#ஆதித்தமிழர் #பேரவை மதுரை.

No comments:

Post a comment