அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

அருந்ததியர் மீது தாக்குதல் பேரவை முயற்சியால் வழக்கு பதிவு


 ·
 மாவட்டம். சேடபட்டி ஒன்றியம். தற்போது T,கல்லுப்பட்டி சோலைமதுரைப்பட்டி கிராமத்தில் வசிக்கும் கருப்பசாமி என்பவரை கடந்த 16.7.14 அன்று சாப்டூர் பகுதியைச் சேர்ந்த. செல்வத்தேவர் என்பவர் வெட்டியதில் படுகாயம் அடைந்தார்.இதில் செல்வத்தேவர் மீது ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் முயற்சியால் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கடந்த 27.4.17 அன்று முடிவுக்கு வந்தது.
செல்வத்தேவருக்கு ஆயுள் தண்டணையும்.
பாதிக்கப்பட்ட கருப்பசாமிக்கு சாதியைச்சொல்லி இழிவு படுத்தியதற்கு நிவாரணம் ₹90000/- மற்றும்.
அரிவாளால் தோள்பட்டையில் வெட்டி காயப்படுத்தி கொலை முயற்சி செய்ததாக பட்டியல் பிற்சேர்க்கை 1
வரிசை எண் -17ன் கீழ் ₹1,80,000/- ஆக மொத்தம் ₹2,70,000/- மாவட்ட நிர்வாகம் வழங்க நீதிமன்றம் 27.4.17 அன்று உத்தரவு வழங்கியது. இன்று வரை நிவாரணம் கிடைக்கவில்லை
இது சம்பந்தமாக பேரையூர் காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று நீதிமன்றம் அறிவித்த நிவாரணத்தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
என இன்று மனு கொடுத்தோம்.
தகவலுக்கு.
பெ.கருப்பசாமி.
9047344366
சி.விடுதலை சேகரன்
9025237005.
மதுரை.

No comments:

Post a comment