அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

மாட்டுக்கறி வியாபாரி மர்ம மரணம்மாட்டுக்கறி வியாபாரி மர்ம மரணம்
"""""""""""""""""""""""""
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வடக்கிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட புரவிபாளையத்தைச் சேர்ந்த 55 வயதான அருந்ததியர் நாகராஜன் கடந்த 4.6.2017 அன்று தலையில் மட்டும் கொடுங்காயத்துடன் பிணமாகக் கிடந்துள்ளார்.
வழக்கம் போல் காவல்துறையினர் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு மரணம் அடைந்து விட்டார் என எப்.ஐ.ஆர். போட்டுவிட்டு வழக்கை முடித்து விட்டனர்.
மேற்படி நாகராஜன் கடந்த 35 ஆண்ட்டுகளுக்கு மேலாக மாட்டுக்கறி வியாபாரம் செய்து வருகிறார், சில நேரங்களில் தனது இரு சக்கர வாகனத்தில் கறியை எடுத்துச் சென்று ஊர் ஊராக விற்பதும் வழக்கம், இதை ஏற்றுக்கொள்ள முடியாத சில காவிப் பரிவாரங்கள் இவரை பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில்தான் கடந்த 4.6.2017 அன்று தலையில் மட்டும் இரும்புக் கம்பி கொண்டு அடித்து கொலை செய்தது போல் மர்மமான முறையில் மரணம் அடைந்து சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்தார், இது குறித்த சந்தேகத்தை காவல்துறையிடம் எடுத்துச் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று 10.7.2017 கோவை ஆட்சிதலைவரிடத்திலும், மாவட்ட நீதி மன்றத்திலும் மரணமடைந்த நாகராஜனின் மனைவி பழனாள் மூலம் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட நிதிச்செயலாளர் தாமரைவீரன் தலைமையில் மனுவளித்தனர். உடன் மாவட்ட அமைப்புச் செயலாளர் வானுகன், மாநகர தலைவர் முரளி மற்றும் பொதுச்செயலாளர் நாகராசன் இருந்தனர்.
______________
தகவல்
பொதுச்செயலாளர்
10.7.2017 கோவை.

No comments:

Post a comment