அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. ---பேரவை நிறுவனர் 'அய்யா'அதியமான் கண்டனம்

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
""""""""""""""""''''''''''''''''''''''''''""""""""'''
பேரவை நிறுவனர்
'அய்யா'அதியமான் கண்டனம்
கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் இன்று (17.6.2017) அதிகாலை பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தத் தாக்குதலில் அலுவலக ஜன்னல் மற்றும் அங்கே நிறுத்தப்பட்டிருந்த காரின் ஒரு பகுதியும் சேதம் அடைந்துள்ளது.
இது போன்று அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அண்மைக் காலமாக தொடர்வது கடும் கண்டனத்துக்கு உரியது.
தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நுழைந்து கடந்த வாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது பார்ப்பனிய பயங்கரவாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்த முற்பட்டது.
தற்போது தமிழகத்தில் கோவையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக் குழு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தில்லியில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து கோவையிலும் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருப்பதை பார்க்கின்ற போது இந்த சதியின் பின்னணியில் பார்பனிய பயங்கரவாத பாசிச கும்பல் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரிய வருகிறது.
தமிழத்தில் எப்படியும் காலூன்றிவிட வேண்டும் என கங்கணம் கட்டிகொண்டு அழைகின்ற பார்பன பாசிச கும்பல் அதற்கு கோவையை முதன்மை இடமாக தேர்வு செய்து செயலாற்றி வருகிறது, என்பதைத்தான் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
இதை தமிழக மக்களாகிய நாம் ஒன்றிணைந்து முறியடித்தாக வேண்டிய தேவையும் அவசியம் எழுந்துள்ளது, சமூகநீதிக்கும் ஜனநாயகத்திற்கு மத ஒற்றுமைக்கும் மதிப்பளித்து நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக இருக்கக் கூடிய தமிழகத்தில் பார்பனிய பயங்கரவாத சக்திகளுக்கு இடம் தரமால் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
எனவே இதில் முழு கவனம் செலுத்தி பார்பனிய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக செயலாற்றிவரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதோடு, இந்தியா முழுமைக்கும் அதையே உறுதிபடுத்த வேண்டும் என்று மோடி அரசையும் ஆதித்தமிழர் பேரவை வற்புறுத்துகிறது.
இவண்
இரா.அதியமான்
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை,
தலைமையகம், கோவை.
17.6.2017

No comments:

Post a comment