அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்கும்! ---பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அறிக்கை.

நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில்
ஆதித்தமிழர் பேரவை பங்கேற்கும்!
""""""""""""""""""""""""""""""""""""
பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அறிக்கை.
'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மாநில மத்திய அரசுகள் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சூலை 27ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் நடத்தப்படும் “மனித சங்கிலி போராட்டத்தில் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்பட்ட இசுலாமிய சிறுபான்மை ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பறிக்கவும், தமிழகத்தில் தழைத்து நிற்கும் சமூகநீதி கொள்கைக்கு முடிவு கட்டவுமே மத்திய பாஜக தலைமையிலான மோடியின் மக்கள் விரோத அரசு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. இதை ஆதித்தமிழர் பேரவை தொடக்கத்தில் இருந்தே எடுத்துரைத்து தனியாகவும் தோழமை இயக்க கட்சிகளுடன் இணைந்து போராடிவருகிறது.
இதன் தொடர் நடவடிக்கையாக ஜூலை 27ல் திமுக சார்பில் நடத்தப்படும் மனிதசங்கிலி போராட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை அளிக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்று சமூகநீதியை காத்திட கரம் கோர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இப்போராட்டம் வெற்றிபெற பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும், முழு ஒத்துழைப்பை நல்கி சமூகநீதி கொள்கையை காத்திட வேண்டும் என அனைத்துத் தரப்பு மக்களையும் ஆதித்தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.
இவண்
இரா.அதியமான்,
நிறுவனர், ஆதித்தமிழர் பேரவை.
(கனடா 22.7.2017)

No comments:

Post a comment