அண்மையச்செய்திகள்

Tuesday, 23 October 2018

தோழர் உதயசூரியன் மறைவிற்ற்கு ஆதித்தமிழர் பேரவையினர் அஞ்சலிஆதித்தமிழர் பேரவையின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின்.. நிதிச்செயலாளரும்.,
சிறந்த களப் போராளி,
பேரவையின் பல்வேறு மக்கள் போராட்டத்தில் தன்னை முழுமையாக.. ஈடுபடுத்தி...,
கடமைக்கென்று போராட்டத்தில் ஈடுபடாமல் ..
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பெற உணர்வுடன் போராட்ட களத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒப்பற்ற போராளி...

காவல்துறையின் பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராகவும்..களம் கண்ட போராளி...

மக்களுக்கான போராட்டத்தில்..காவல்துறையால் பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்த போதும் ..
போராட்டத்தில் பின் வாங்காத போராளி...

பல்வேறு மக்களுக்கான போராட்டம்,ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி..தனது கனத்த குரலில் முழக்கமிட்ட போராளி...

மரியாதைக்குரிய தோழர். போராளி.உதயசூரியன் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்..

உதயசூரியனுக்கு வீரவணக்கம் செலுத்த
ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட நெல்லை தூத்துக்குடி மதுரை மாவட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினோம்...

தோழர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்....
No comments:

Post a comment