அண்மையச்செய்திகள்

Sunday, 21 October 2018

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் தோழர் வீராசாமி நினைவேந்தல்

*கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் தோழர் வீராசாமி நினைவேந்தல்*
21 10 2018 *கோவை தொண்டாமுத்தூர் புத்தூர் புது காலனியில் உள்ள சமூக கூடத்தில் காலை 11 மணியளவில் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் தோழர் வீராசாமியின் நினைவேந்தல் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆதி முனுசாமி தலைமையில் நடைபெற்றது*
*பேரவைத்தலைவர் நமது அரசியல் முகவரி ஐயா அவர்கள் வீரா சாமி உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வீராசாமியின் கடந்த 20 ஆண்டு கால பேரவையின் வளர்ச்சிக்கும் தொண்டாமுத்தூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள அருந்ததியர் மக்களுக்கு அவர் ஆற்றிய களப்பணியும் நினைவுகூர்ந்தார்*
*குறிப்பாக கொத்தடிமையாக இருந்த வீராசாமி முதலில் தான் விடுதலை பெற்று அப்பகுதியில் உள்ள விவசாய கொத்தடிமைகளை மீட்டெடுத்த போராட்டங்களையும் வன்கொடுமைகளுக்கு எதிராக களப்பணியாற்றி அருந்ததியர் மக்களை வாக்கு வங்கியாக திரட்டும் முயற்சி வெகுவாக பாராட்டினார்*
*அரசியலில் அருந்ததியர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்கின்ற* *வீராசாமியின் கனவை அனைவரும் களப்பணியாற்றி அருந்ததியர் அதிகாரத்திற்கு அடித்தளம் அமைப்போம்*
*என்று நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்*
*இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார்*
*மாநில செயற்குழு உறுப்பினர் கோபால் தெற்கு மாவட்ட செயலாளர் தாமரை வீரன் பொருளாளர் மாநகர் மாவட்ட தலைவர் மகேஸ்வரி சொசைட்டி டைரக்டர் ரவி வடக்கு மாவட்ட துணை தலைவர் குரு அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் நிதிச் செயலாளர் மாணிக்கம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்*
*தகவல் ஊடகப்பிரிவு ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்டம் கோவை*No comments:

Post a comment