அண்மையச்செய்திகள்

Sunday 21 October 2018

வகங்கை சீமையில் வீரமங்கை குயிலின் நினைவேந்தல்

*சிவகங்கை சீமையில் வீரமங்கை குயிலின் நினைவேந்தல்* 19 10 2018
*காலை 10 மணியளவில் மதுரை மேலவாசல் முன்னாள் மாமன்ற உறுப்பினர் துரைராஜ் இல்ல திருமண விழாவில் மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் நமது அரசியல் முகவரி அய்யா அதியமான் அவர்கள் பங்கேற்று இணையர்களை வாழ்த்தினார்*
*பின்பு தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து 11:30 மணியளவில் அய்யா அவர்கள் சிவகங்கை சீமைக்கு நீல படையுடன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சென்றார்.*
*வேலுநாச்சியார் மணி மண்டபத்தில் அமைந்துள்ள வீரமங்கை குயிலி நினைவுத் தூண் அமைந்துள்ள இடத்தில் அய்யா அவர்கள் தலைமையில் நீலப்படை வீரமங்கை குயிலி வெண்கலச்சிலையுடன் தனியாக நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் வரலாற்றை மாற்றும் சதிகளை முறியடிப்போம் என முழக்கங்களுடன் அணிவகுத்து நினைவுத்தூண் முன்பு அய்யா அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்*
*ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை சார்பில் தொழிலாளர் பேரவையின் கொடியை அறிமுக நிகழ்வு*
*அதன்பின் வீர மங்கையின் வீரம் மிக்க வாழ்வையும் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நெஞ்சுரம் மிக்க இறுதி போர் நிகழ்வையும் எழுச்சியோடு பதிவு செய்தார் மேலும் உலகத்தின் மிகச்சிறந்த கொரில்லா முறை படை அமைத்த மேதகு தலைவர் பிரபாகரன குயிலி பெயரில் படைப்பிரிவு இருந்ததை நினைவு கூர்ந்தார் மேலும் குயிலியின் வரலாற்றை அபகரிக்க நினைக்கும் கயவர்களை எச்சரிக்கை விடுத்தார் எத்தனை தடை வந்தாலும் அதை தகர்த்தெறிவோம் என்று முழக்கமிட்டார்*
*குயிலுக்கு முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய தனியாக நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தார்*
*அந்த வளாகத்தில் இருந்த வேலு நாச்சியார் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்*
*மாலை 5 மணியளவில் டாஸ்மாக் பணியாளர் பேரவையின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அக்கூட்டத்தில் ஒருமனதாக நாமக்கல் முருகேசன் என்ற முகிலரசன் மாநில அமைப்பாளராக ஐயா அவர்களால் நியமிக்கப்பட்டார்*
*அதன்பின்பு தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதள அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் அதன்மூலம் இன்றைய இளைஞர்களுக்கு அருந்ததியர் சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் வரலாறுகளை கொண்டு செல்வது குறித்தும் விளக்க உரை நிகழ்த்தினார் சமூகவலைதள அணி பொறுப்பாளர்களாக நீலவானத்து நிலவன் அதியர் பிரியன் தங்கராஜ் காந்தி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்*
7 *மணியளவில் மதுரையிலிருந்து புறப்பட்டு சரியாக 10 மணிக்கு பழனியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்கை பரப்புச் செயலாளர் தலித் சுப்பிரமணியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேற்கண்ட இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் அமைப்பு செயலாளர் துணை பொதுச்செயலாளர்கள்
் மற்றும் அணித்தலைவர்கள் செயலாளர்கள் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்*
தலைமைக்காக
பொது செயலாளர்
கோவை ரவிக்குமார்



No comments:

Post a Comment