அண்மையச்செய்திகள்

Thursday 25 October 2018

பேரவை மாநகர ஆதித்தமிழர் செயற்குழு கூட்டம் ஆதித்தமிழன் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது

பேரவை மாநகர ஆதித்தமிழர் செயற்குழு கூட்டம் ஆதித்தமிழன் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது


கோவை மாநகராட்சி ஆதித்தமிழர் பேரவை மாநகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது செயற்குழுவிற்கு மாநகர செயலாளர் மாசாணம் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் கோவை மாநகர பேரவை செயலாளர் முத்துக்குமார் புறநகர வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் கூட்டுறவு சங்க இயக்குனர் ரவி ஆகியோர் பங்கேற்றனர் இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி கோவை மாவட்டம் நகராட்சி பேரூராட்சி கிராம பஞ்சாயத்துகளில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மாத சம்பளம் போனசாக வழங்க வேண்டும் தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில் அரசு ஆணை 62 அடி தினக்கூலி அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் கையால் மலம் அள்ளும் அவல நிலையை ஒழித்திட தமிழகம் முழுவதும் பாண்டி கூட் போன்ற நவீன எந்திரங்களை அனைத்து ஊராட்சிகளிலும் பயன்படுத்த வேண்டும் அதற்காக மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோவை மாநகராட்சியில் நகர்புறத்தில் குடிசைப் பகுதிகளை அகற்றாமல் அதே பகுதியில் நவீன அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது இதில் சுப்பிரமணி மணிபாரதி சாந்தாமணி சரத்குமார் தர்மராஜ் வெள்ளிங்கிரி புறநகர் மாவட்டம் சார்பில் மருதாசலம் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் தகவல் ஊடகப்பிரிவு ஆதித்தமிழர் பேரவை கோவை மாநகர் மாவட்டம்

No comments:

Post a Comment