அண்மையச்செய்திகள்

Friday 25 December 2015

துப்புரவு பணியாளர் மகள் 13.வயது சிறுமி கை,கால் வெட்டப்பட்டு உயிருக்கு போராட்டம். சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் "அய்யா" அதியமான் வலியுறுத்தல்.

துப்புரவு பணியாளர் மகள் 13.வயது சிறுமி கை,கால் வெட்டப்பட்டு உயிருக்கு போராட்டம்.
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் "அய்யா" அதியமான் வலியுறுத்தல்.
""""""""""""""""
ஈரோடு வெண்டிபாளையம் துப்புரவு தொழிலாளி நாகராஜ் என்பவரது மூத்தமகள் 13 வயது ஹரிப்பிரியா கடந்த 21.12.2015 இரவு 8.00 மணியளவில் கை கால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தனான நிலையில் இரயில் தண்டவாளம் அருகே வீசப்பட்டு கிடந்துள்ளார்.

இதை அறிந்த அவரது பெற்றோர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து முதல் கட்ட மருத்துவத்துவ சிகிச்சையை தொடங்கி, பின்னர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவிழந்து அவசர சிகிச்சை பிரிவில் இருக்கின்றார்.

தகவல் கிடைக்கப்பெற்று நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 9.00 மணியளவில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று பார்த்தேன்.

சிறுமி ஹரிப்பிரியா ஒரு கை, ஒரு கால் வெட்டப்பட்டு தலையில் படுகாயம் அடந்த நிலையில் ஆக்ஸிசன் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பத்தை பொறுத்த மட்டில் இது விபத்து என்று பார்க்க முடியாது, இதில் மிகப்பெரிய மர்மம் அடங்கியுள்ளது. இச் சிறுமி ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் பாலியல் சித்தரவதைக்கு உள்ளாக்கபட்டு பின்னர் கை,கால் வெட்டப்பட்டு வீசப்பட்டு இருக்கவேண்டும், மேலும் அந்த சிறுமியிடம் கடைசியாக அரை மணிநேரம் செல்போனில் பேசிய மர்மநபர் யாரென்று கண்டு பிடித்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த சம்பவத்தை விசாரிப்பதில் ஈரோடு காவல்துறை மிகவும் மெத்தனப்போக்கை கடைபிடிக்கிறது. எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவே தமிழகஅரசு இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக விளிம்பு நிலை அருந்ததியர் மக்கள் மீதான இதைப்போன்ற வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைப்பற்றி இந்த அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. எனவே தமிழக அரசின் இந்த அருந்ததியர் விரோத போக்கை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

இவண்.
இரா.அதியமான்
ஆதித்தமிழர் பேரவை
24.12.2015



No comments:

Post a Comment