அண்மையச்செய்திகள்

Sunday 6 December 2015

திக்கு தெறியாதக், காட்டில் சிக்கி சின்னாப்- பின்னமாகிக்- கொண்டிருந்த மக்களை தட்டியெழுப்பி தன்மான- மூட்டி தடந்தோள் தட்டச்- செய்த- தன்மானச்சிங்கம்! புரட்சியாளர் ---க. இராஜராஜன். துணை பொது செயலாளர் ஆதித்தமிழர் பேரவை

புரட்சியாளர் அம்பேத்கருக்கு
வீரவணக்கம்
******"""""""""""******,*****

திக்கு தெறியாதக்,
காட்டில் சிக்கி சின்னாப்-
பின்னமாகிக்-
கொண்டிருந்த மக்களை
தட்டியெழுப்பி தன்மான-
மூட்டி தடந்தோள் தட்டச்-
செய்த- தன்மானச்சிங்கம்!

அடிமைகளாய், ஆமைகளாய் இருந்த
மக்களை- அநீதிக்கெதிராய்,
ஆர்பாரித்தெழச்செய்த
அரும்பெரும்-
புரட்சியாளன்.

தெருக்கோடியில்
நாய்களுக்கும்,
நரிகளுக்கும் மத்தியில்
கூனிக்குறுகி உழன்று,
வந்த- ஊமைக்கூட்டத்தைக்
உரிமைக்குரலெழுப்பச்
செய்த- உண்மைத்தலைவன்!.

காலங்காலமாய் உரிமை மறுக்கப்பட்டு,
வாழ்வாதாரம் பறிக்கப்-
பட்டு,வாடி வதங்கி, வழி
தெறியாமல்,
நின்றவர்களாய்!
ஆதரிக்கயாருமற்ற
அபலைகளாய்! அழைந்து திரிந்த,
யாதொன்றுமறியா
அப்பாவி மக்களை
அறிவென்னும் உளி
கொண்டு செதுக்கி
சிலையாக்கி உயிரூட்டிய- சிற்பி!.

அண்டிப் பிழைக்க,
ஆடுமாடுகளை மேய்க்க
வந்தக்கூட்டம் -நாட்டின்
ஆதிக்குடிகளை அடிமை-
யாக்கி , அவனின்- வீரத்தை ,விவேகத்தை
விதி" யென்றும், முற்-
பிறப்பின்பயனென்றும்
சொல்லி பலமிழக்க-
வைத்த- பச்சோந்திகளுக்கு, பாடம் புகட்டியங-
பேராசான்!.

கொலை கொள்ளை,
வன்கொடுமை எனும்
சனாதனச்சேற்றில்,
சாதி, மதமெனும்
காரிருள் இருட்டில்,
கண்மன் தெறியாமல்
கலங்கி நின்ற- மக்களுக்கு, ஒளியேற்றி
உலகறிய வைத்த-
உதயசூரியன்!

தொட்டால்தீட்டு"
பட்டால் குற்றம்"
ஒதுங்கிநில்"
தனி வழி போ"
மணிதம் அல்ல நீ"
என, கேடுகெட்டக்-
கூட்டம் ,உழைக்கும்
மக்களை ஒடுக்கி,
உருக்குழைய- வைத்தலைக் கண்டும்
காணாமல் போகாமல்
மோதி மிதித்து முண்டாசு தட்டிய
ஆசியாவின் அதிசயம்!.

தலித்துகளெனத் தரம்
பிரித்து,இவர்களுக்கு
கல்வி வராது! அறிவுக்கும், இவர்களுக்கும் வெகுதூரமென்று-
வெந்தப்புண்ணில்
வேல்பாய்ச்சிய,
வேதியர்களுக்கு
மத்தியில் கல்வி- கேள்வி- ஒழுக்க-
நெறிமுறைகளில்-
தனக்கு நிகர் யாருமல்லையென
தரணிக்கு- எடுத்துக்காட்டியதோடு
உலகின் மிகச்சிறந்த
பல்கலைக்கழகங்களில்
பட்டம் பெற்ற உண்மைக்
கல்வியாளர்.! பெறாத
பட்டமில்லை! படிக்காத
நூலில்லை! உலகின் மிகப் பெரிய நூல்
நிலையத்தில் முதலில்
நூழைவதும் இறுதியில்
வருவதுமாக இருந்த்து
இவர்தானென உலகம
வியந்துப்பாராட்டுகிறது!

பேராசிரியராக! போராளியாக!
தொழிலாளர்- தலைவராக!
சோசலிசவாதியாக!
எழுத்தாளராக!
சொற்பொழிவாளராக!
சட்டத்துறை- வல்லுனராக!
பகுத்தறிவாதியாக!!
முதல் சட்ட அமைச்சராக!
உழைக்கும் மக்களின்-
மாசற்றத்தலைவராக!
இன்னும் பல்வேறுத்
துறைகளில் , நிலைகளில் தன்னை
வார்த்தெடுத்த பண்முகத் தன்மை,
வாய்ந்த மாபெரும்
தலைவர் இவர்
தானென்று நானிலம்- பறைசாற்றுகிறது!.

பாராளுமன்றத்திலும்,
பன்புக்கழகங்களிலும,
அந்நிய நாடுகளிலும்,
ஆங்கிலேயப்-
பிரதிநிதிகளுடனும்,
வட்ட- மேசைமாநாடுகளிலும்,
தொழிலாளர் -
பேரவைகளிலும்,
மக்கள் மன்றத்திலும்,
மாநாடுகளிலும், பொதுக்கூட்ட -
நிகழ்வுகளிலும்,
போராட்டக்-
களங்களிலும் அவர்
கொட்டிய கருத்து
மழைகள் அனைவருக்குமானது!
அறிவுப்பூர்வமானது!
இன்றைகும் உயிர்த்-
துடிப்போடு துலங்குகிறது!.

உலக அரங்கற்கே
அறிவுரை வழங்கிய
ஆசான்!

உண்மையின் உயரிய வடிவம்!

உரிமைகளின்-
உவமைகளின் உயிர்
நாடி!

கானக்கிடைக்கா-
கற்பூரப்பெட்டகம்!

பூத்துக்குலுங்கும்-
புதுமணத் தென்றல்!

புத்தரின் மறுபிறப்பு!

புத்துலகம் கான விழைந்த, புரட்சியாளர்
அம்பேத்கருக்கு வீர
வணக்கம்! செலுத்துவோம்!

வீர வணக்கம்!
வீர வணக்கம!
வீர வணக்கம்!

விண்ணதிர- முழங்கிடுவோம்!

ஆம் தோழர்களே
வீர சபதமேற்போம்
வீழ்ந்து விட்ட
சமூகத்தின்
விலங்கொடிப்போம்!
வீரத்தின் விளை-
நிலமாய் சமூகத்தை
மாற்றி அமைப்போம்!

சாதிவெறி
மதவெறி
மதுவெறிக்கெதிராய்
அதியமான் எனும்
ஆயுதமெடுப்போம்
ஆரத்தெழுவோம்
வெற்றிபெறுவோம!.

க. இராஜராஜன்.
துணை பொது செயலாளர்
ஆதித்தமிழர் பேரவை

No comments:

Post a Comment