அண்மையச்செய்திகள்

Tuesday 22 December 2015

சென்னையில் பேரவையின் ஆரபாட்டமும்,போர் முழக்கமும், ஆர்பாரிக்கும் வங்கக் கடல் அலையை விஞ்சி நிற்க்கும் என்பதை யார் அறிவார்! அறியவைப்போம் வாருங்கள்த் - தோழர்களே!! --- கா.இராஜராஜன். துனைப் பொதுச்-செயலாளர், ஆதித் தமிழர் பேரவை.

தலைநகர் சென்னையில்,
தலைவர் அதியமான்
தலைமையில்,
ஆர்பாட்டம்!
______________________
மனிதகுல மாண்புதனை,
மன்குழியில் மூடி மறைத்து விட்டு,
ஆரியக்கூட்டம்
ஆடும் வெறியாட்டம்,
யாருமறியாததல்ல;.
மதத்தின் பெயரால்,
கடவுளின் பெயரால்,
மனுதர்மத்தை நிலை-
நாட்டி, சாதியையும்,
முடநம்பிக்கைகளையும்,
கட்டவிழ்த்துவிட்டு, 
களிநடனம் புரியும்-
பார்பன பயங்கரவாதம்,
முறியடிக்கப்பட-
வேண்டும்- மூழ்கடிக்கப்பட- வேண்டும்
என்பதிலே
இருவேறு கருத்து
கிடையாது!
தந்தைப்பெரியாரும்,
புரட்சியாளர்-
அம்பேத்காரும்,
ஆரியத்தை 
எதிர்த்ததோடு
மட்டுமல்லாமல்-
அவர்களின்-
அத்துமீரளை,
அநியாயத்தை,
அழித்தொழிப்பதிலே;
முன்னலை வகித்தனர்.
அவர்களின் வழியில்
சமூகப்போராளி அய்யா-
அதியமான் அவர்களும்
சாதி,மதம்,மது,
வெறியாட்டத்திற்கெதிராக, பல்வேறு போராட்டக் களங்களை
சந்தித்து வருகிறார்.
அதன் ஒருப்பகுதியாக
சென்னையில்
ஆர்ப்பாட்டம்.....
மழைவெள்ளத்தால்
பெருமளவு பாதிக்கப்-
பட்ட,சென்னையில்
வெள்ளம் கோரத்தாண்டவமாடிய
பொழுது,மக்கள் தங்கள்
உயிரை காப்பாற்றினால் போதும் என்கிர நிலையில் சாதி,மதம்,
எதுவுமே தோன்றாமல்
மனிதம் மட்டுமே
இருந்த்து!
தொண்டு நிறுவனங்கள்,சமூக-
ஆர்வலர்கள்,
அமைப்புகள்,
இவர்களின் பணி மகத்தானது என்பதை மறவாமல்
பல்வேறுத் தளங்களில்
பேரவை பதிவு செய்து
வருகிறது.
இது ஒரு புறமிருக்க.....
வெள்ளம் வடியத்தொடங்கியதும்
மீண்டும் மதமும், சாதியும்,மக்கள் மனதில்
குடியேறத்தொடங்கியத
வெளியே இருந்தவர்கள்
வீட்டுக்குச் சென்றவுடன்
குப்பைக்கூழங்களை
கொட்டியதுடன்,குவிந்து
கிடந்த முடைநாற்றம்
அடித்துக்கொண்டிருக்கி
- ர குப்பைகளை அகற்ற-
துப்புரவு பணியாளர்கள்தான் வர
வேண்டும் எனும் எதிர்-
பார்ப்பு ஏகமாய் எழுந்த்து!
அரசு சென்னையிலிருக்கும்
25 ஆயிரம் துப்பரவு
பணியாளர்கள் போதாதென்று தமிழக-
மெங்குமிருந்தும் சுமார்
10 ஆயிரம் துப்புரவு
பணியாளர்களை ஆசை வார்த்தை கூறிஆடு,
மாடுகளைப் போல்
லாரிகளில் ஏற்றி 10,12,
மணி நேரம் பயணித்து
அழைத்து வந்துள்ளார்கள்.
எந்தவிதமான வசதிகளுமில்லாத இடங்களில் பள்ளிகளில்-
அவர்களை தங்க வைத்துள்ளார்கள்.
போதுமான கழிப்பிட
வசதியில்லை! குடிநீர்
இல்லை! சரியான உணவுகிடையாது!

குப்பைக்கூழங்கள்
என்றால் வெறுமனே
குப்பைகூழங்கள் அல்ல:
செத்த மிருகங்கள்,எலி,
வகைகள், மணிதக்-
கழிவுகள்,சாக்கடைகள்,
நெடுநாள் கிடந்த முடை
நாற்றமடிக்கும் -
குப்பைகள் என
சற்றேறக்குறைய 12
லட்சம் டன் குப்பைகளை
அகற்றச் செல்லும்
இவர்களுக்கு எந்தவித
பாதுகாப்பும் இல்லை!
கையுரை, காலுரை,
கவசமெதுவுமில்லாமல்
கடும் உழைப்பை வாங்கிக்- கொண்டிருக்கிரார்கள்!
தினமும் 12 மணி நேரம்
வேலை செய்துவிட்டு,
தங்குமிடம் சென்றால்,
குளிப்பதற்கு தண்ணீர்
கிடையாது, சத்தான
உணவு கிடையாது!
மாற்றுத்துணி கிடையாது! அதே
நாற்றத்துடன் உறங்கும்
அவலநிலை! இது மனித
வாழ்வு முறைதானா?
எனத் தன் வாழ்வை
நொந்த வண்ணம்
துப்புரவுப் பணியாளர்கள்!
இவர்களில் இருவர்
பணிச்சுமையில்
இறந்த பரிதாபம்!
எத்துனை கொடுமை!
எத்துனை கடுமை!
சென்னை நவநாகரீக-
நகரமா! நய வஞ்சகர்கள்
நடமாடும் பூமியா! என
கேட்க- தோன்றுகிறதல்லவா!
துப்புரவு பணியாளர்களுக்கு
ஆதரவுகாட்ட யாருமில்லை?
யார்யாரையோ!
எதறக்கெதற்கோ!
பேட்டி எடுத்து ஒளிபரப்பும் ஊடகங்கள்
பத்திரிகைகள் இவர்களின் உண்மை
நிலையினை நாட்டுக்கு
உணர்த்த மறுக்கிறது!
மாறாக, செய்தியை
இரட்டடிப்புசெய்து அரசுக்கு ஆதரவாக
செயல்படுகின்றனவே!
ஏன்?
பொதுத் தளத்திலிருக்கிறோம்
என்று சொல்லும்
சமூக அமைப்புகள்,
சமூக ஆர்வலர்களெல்லாம்
எங்கே?
பொதுவுடமைச்- சிந்தனையாளர்கள்
பெரியாரியம் பேசுபவர்களின் நிலைப்பாடு என்ன?
தூய்மை இந்தியா திட்டம் என்னவானது?
இதில் இணைந்து
நடித்த நடிகர்கள்,
அமைச்சர்களெல்லாம்
எங்கே போணார்கள் ?

காவிகளின்- காவிடியாட்டம் எங்கும்
காணோமே! எங்கே
தொலைந்தார்கள்?
ஆக, இந்த அவலங்களை களைய!
துப்புரவுபணியாளர்க-ளை மீட்டெடுக்க!
சாதிய, மதவாதத்தை
சவுக்காள் அடிக்க
ஆர்த்தெழுந்திருக்கிர
ஒப்பற்ற ஒரேத்தலைவர்
அய்யா அதியமான்
அவர்கள்தான்!
அய்யாவின் தலைமையில்
ஆர்ப்பாட்டம் பேரவையின் 
வரலாற்றில் இது ஒரு
வெற்றிப்படிக்கட்டாக
அமையும் என்பதில்
ஐய்யமில்லை!
ஆக, பல்வேறுக் கேள்விக் கணைகளை
தொடுப்பதோடு, என்னற்ற தத்துவார்த்த
நிலைகளை,உண்மை
உணர்வுகளை எடுத்துச்
சொல்வதற்கும்,
கோட்டையில் தூங்கிக்
கொண்டிருக்கும்
கொள்கைத்- திறமற்றவர்களைத்-
தட்டியெழுப்பவும் இந்த
ஆர்பாட்டம் நமக்குப்
பயன்படவிருக்கிறது.
வீர நடைநடந்து மதுரை
வீரன், ஒன்டிவீரனாக
உருமாறி  பேரவைத்
தோழர்கள் பெருந்திரளாக
வருவார்கள் என்பது
ஆடசியாளர்களுக்கும் தெறியும், அனைவருக்கும்
தெறியும்!
சென்னையில்
பேரவையின் ஆரபாட்டமும்,போர்
முழக்கமும்,
ஆர்பாரிக்கும் வங்கக்
கடல் அலையை விஞ்சி
நிற்க்கும் என்பதை யார் அறிவார்!
அறியவைப்போம்
வாருங்கள்த் -
தோழர்களே!!


கா.இராஜராஜன்.
துனைப் பொதுச்-செயலாளர்,
ஆதித் தமிழர் பேரவை.

No comments:

Post a Comment