அண்மையச்செய்திகள்

Sunday, 6 December 2015

அரசும், உளவுத்துறையும்.. அள்ளிவீசும் அண்டப் புளுகுகளை அம்பலப்படுத்துவோம்! மக்களை அரசியல் படுத்துவோம்!! ------ச.சு.ஆனந்தன் - ஆதித்தமிழர் பேரவை

அரசும், உளவுத்துறையும்.. அள்ளிவீசும் அண்டப்
புளுகுகளை அம்பலப்படுத்துவோம்! 
மக்களை அரசியல் படுத்துவோம்!!    
"""""""""''''''''''''''''''''
மக்களின் மதியை கெடுத்து 'மனுவின்' மயக்கத்தில் வைத்து அச்சத்தில் உறைய வைக்கும் அரசு அள்ளிவீசும் சில்லறை விளம்பரத்திற்கு உளவுத்துறையின் ஊதுகுழலாகிப்போன ஊடகங்களும்...

காவிப்புளுகை கதையாகவடித்து சினிமாவில் காட்சியாக வைத்து காலை முதல் மாலை வரை இஸ்லாமியனை தீவிரவாதியாகவும் இனத்தின் விடுதலைக்கு போராடுபவனை நக்ஸலைடாகவும் முத்திரை குத்தி மனிதனின் பொதுப்புத்தியில் வெறுப்பை வளர்த்து அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும்,     

அவர்களை தீர்மானிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களது சுரண்டல் மோசடி ஊழல், கொலை கொள்ளை போன்றவற்றிலிருந்து தங்களை காத்துக்கொண்டு.          

மக்களின் உழைப்பை மதத்தின் பெயரால் சுரண்டுவதற்கு இந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து கொழுக்கவும், பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதிலிருந்து திசைமாற்றி தினம் தினம் அச்சத்தில் அடக்கி வைத்திட "மனுதர்மம்" போட்ட புழுக்கைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே!    திசம்பர்-6

இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தையும் நவீன இந்தியாவின் சிற்பியுமான புரட்சியாளார் அம்பேத்கரின் நூற்றாண்டிற்கு பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழுச்சியும்,

இட ஒதுக்கீட்டின் மூலம் படித்து மற்றவருக்கு இணயாக முன்னேறிய பின்பும் தொட்டால் தீட்டு நிழல் பட்டால் தோசம் என ஒதுக்கி ஓரம்கட்டி வைத்த மதத்தின் பிடியிலிருந்து மனிதனை மனிதனாக மதிக்கும் மார்க்கத்தை தாழ்த்தப்பட்டவனும் பிற்படுத்தப்பட்டவனும் ஏற்றுக்கொள்ள முற்பட்ட போதும்,

பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்காக கட்டாயம் இடஒதுக்கீடு வேண்டும் என இடைவிடாது போராடிய போதும்,

அப்போதைய நேரு அரசு பிற்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை தர மறுத்த போது, "பிற்படுத்தப்பட்டோருக்காக" தனது சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எரிந்து விட்டு வந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.  

அதன் நீட்சியாகத்தான் வி.பி.சிங் அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 1990 ஆகஸ்டில் இட ஒதுக்கீடு வழங்கின.                            

மதத்தால் பிரிந்தவர்கள் மார்க்கமாக ஒன்றிணைவதையும் மூன்று விழுக்காடான பார்பனர்கள் இந்திய அரசியல் அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் ஏகபோகமாக அனுபவித்ததை இந்த இட ஒதுக்கீடு தடுத்தது,           

இட ஒதுக்கீட்டின் பயனாக தாழ்த்தப்பட்டவனும் பிற்படுத்தப்பட்டவனும் கல்வியில் பொருளாதாரத்தில் அரசியல் அதிகாரத்தில் பார்ப்பானுக்கு இணையாக முன்னேறுவதை நேரடியாக எதிர்க்க துப்பில்லாத அந்த மனுவின் குட்டிகள்.

1990_செப்டம்பரில் அயோத்தியை நோக்கி அத்வானி தலைமையில் ரதயாத்திரை செல்கின்றனர், 
பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் அரசை கவிழ்க்கவும், தாழ்த்தப்பட்டோரின் எழுச்சியை மழுங்கடிக்கவும்   இஸ்லாமியரை அடக்கி அச்சத்தில் வைக்கவும் அத்வானி அனுமார் கூட்டத்தால்!  தேர்ந்தெடுக்கப்பட்ட நாளே டிசம்பர்,,,,,6....

இதுவரை மக்களை மிரட்டி,
ஏமாற்றி அச்சத்தில் வைத்திருந்த அரசிற்கும் அதன் ஊதுகுழலான ஊடகங்களுக்கும்,

நாம் கேட்க்கும் கேள்விகள்..

இந்தாண்டு டிசம்பர்-6-ல் மட்டும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லையே! அது ஏன்..?

இரயில் நிலையங்களில், விமானநிலையங்களில் பாதுக்காப்பை பலப்படுத்தவில்லையே!, அது ஏன்? 

கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் பாதுகாப்பு போடவில்லையே! அது ஏன்?

உளவுதுறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் எந்த தீவிரவாத அச்சுறுத்தலுக்கான தகவல்கள் வரவில்லையே! அது ஏன்?

வரலாறு காணாத ஐந்தடுக்கு ஆறடுக்கு பாதுகாப்புகள் இல்லையே! அது ஏன்?

இதுவரை இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டதும் இல்லை! அவர்களது மார்க்கம் அதற்காக வழிகாட்டவும், இல்லை, என்பதுதான்! உண்மையிலும் உண்மை என்பதை இப்போதாவது, பொதுசனங்களின் பொதுப்புத்திக்கு புலப்பட்டால் சரிதான்!

இவை அனைத்தும் மக்களை ஆளும் அரசும் உளவுத்துறையும் செய்து வந்த சதிதான் என்பது இப்போதாவது பொதுப்புத்திக்கு புலப்பட்டால் சரிதான்!

அரசின்... அடாவடித்தனங்களை மறைத்து அது கட்டவிழ்த்துவிடும் புழுகுமூட்டைகளை ஊதி பெரிதாக்கும் ஊடகங்களும்,

காவிப்புத்திக்கு காவடிதூக்கும் சினிமாவும்  இஸ்லாமியனை தீவிரவாதியாகவும் இனத்தின் விடுதலைக்கு போராடுபவனை நக்ஸலைட்டாகவும் சித்தரித்து,

மனிதனின் பொதுப்புத்தியில் வெறுப்பை வளர்த்து அரசியல் லாபம் தேடும் அரசியல்வாதிகளும், அவர்களை தீர்மானிக்கும் கார்பரேட் கம்பெனிகளும்,

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி சுரண்டுவதற்கும், இந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து குவிப்பதற்கும்,

அடுக்கடுக்காய் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்  அச்சுறுத்தல்களை கண்டு நாம் நம்பிக்கொண்டு
நமது உரிமைகளுக்கான போராட்டத்திலிருந்து விலகுவோம் என்றால்!

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான திசம்பர் ,,6
மட்டுமல்ல இனி எல்லா நாட்களுமே! நமக்கு எதிராக மாறும்..

வாழ்க்கை போராட்ட மயமானது!
போராட்டம் இன்பமயமானது!
என்ற மர்க்ஸின் மந்திரத்தை மனதில் கொண்டு..

மக்களை விழிப்பூட்ட அண்ணலின் மொழியில்
கற்பிப்போம்! அய்யா அதியமான் வழியில்
போராடுவோம்!!
_____________________
அய்யாவின் வழியில் .ச.சு.ஆனந்தன்

No comments:

Post a Comment